பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3?'

'இன்னும் எல்லோரும் ஒருகுடும்பம்தான். பாயி வீடு அந்தக் காலத்துக்கோட்டை மாதிரி. அகழிதான் இல்லை. எல்லாரும் நைனாவுக்கு சேவுகம், நைனா இருக்கிறவரை அவங்களுக்கோ, அவங்க பீகம் ஸஹிபாக்களுக்கு எண்ணம் எப்படியிருந்தாலும் ஒண்னும் நடக்காது. வெற்றிலைக்கு எடுக்கற மாதிரி, முதுகு நரம்பை உரிச்சிடுவாரு. ஏன், அத்தனையும் சுயார்ஜிதம். தினம் மட்டன் குப்பில் அவனவன் பல்லால் கடிச்சுச் சுரண்டி சப்பற எலும்புத் துண்டு கூட ஐயாவுடையது. இந்த கூட்டுக்குடும்ப விஸ்டம் -இதிலே என்ன குறைவாயிருக்கு? இந்தப் பொருளாதார நிபுணர்களெல்லாம் என்னென்ன தியரியெல்லாம் பேசறாங் களே, எனக்கும்தான் தெரியல்லே.'

இதே கருணாகரன் என்னிடம் ஒருமுறை சொல்லி யிருக்கிறார். அவருடைய தாயார் தனியாத்தானிருக்கிறா ளாம். இரண்டு மாடுகளை வைத்துக் கொண்டு பிழைக் கிறாள். அம்மாகிட்டே தான் இன்னமும் எனக்கு வேண்டிய பாலை வாங்கிக்கறேன்-துட்டு கொடுத்துத் தான். அவள் அதிலே கெட்டி. ஆனால், அவள் கழுத்தில் தான் தேர் வடமாட்டம் நாலு பட்டைச் செயின் தொப்புள் வரை தொங்குது. இவளுதையெல்லாம் வியாபாரம் வியாபாரம்னு கடையில் போட்டாச்சு. வரப்போ இவளும் கொஞ்சமாக கொண்டு வரல்லே. என்ன செய்யறது? அம்மா தனியாக் குடித்தனம் செய்யக் காரணம்?' அந்த மனோகரப் புன்னகை புரிந்த வண்ணம் கை விரிக்கிறார். 'எல்லாம் வழக்கம் போல்தான். தொன்று தொட்ட காரணம்தான். ஒரே கூட்டில்ரெண்டு புலி.'

நான் குடும்பத்தை விட்டு ஓடி வந்தவன்.

எங்களிருவருக்கும் கூட்டுக் குடும்பத்தைப் பற்றிப் பேச என்ன வாய்ப்பு இருக்கிறது,