பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

தோசைத் தட்டைநீட்டினேன், அப்படியே வாங்கிக்கொண் டார். மள மள வென முறித்து வாயில் போட்டுக் கொண்டே...

'உர்ஸ் ஏதோ பறைஞ்சது'

'எஸ், வில் யூ பர்மிட்?"

'உர்ஸ் ஒரு வில்லி.'

"அப்போ ங்ேகள் அனுப்பலியா?”

கோ சாமியோட அனுப்ப என்ன?”

“தேங்க்யூ.”

'உர்ஸ் ஒரு மான் குட்டி. ஒரு இன்னசன்ட்.'

  • நிச்சயமா.'

"மதராசி ஒரு வனப்ரதேசம். ஓநாய்கள், புலிகள்.”

ஒ?!'

'அப்பா தாகம் வரட்றது.'

தோசை தண்ணிர் கேட்கிறதாக்கும்' என்று சட்டென எழுந்தேன். ஆனால் அவர் கையமர்த்தினார். அர்த்தமுள்ள கபடுப் புன்னகை கண்களில் உதயமாகி, உடனே வாய்க்கு இறங்கி கன்னங்களில் வியாபித்தது. ஒஹோ! புரிந்து விட்டது. நெஞ்சில் கோபம் எலி பிராண் டிற்று. பேரம் இந்த லைனில் போகிறதா? உர்ஸ் அப்ப னைச் சரியாக்கிட ற வழி இதுதானா? சுயநலம் என்றால் புத்தி எப்படியெல்லாம் போகிறது? ஆனால் ஆசை காட்டி னவன் நான்தானே? என் சுயகலத்துக்கு நானும் விலை கொடுத்துத்தானே ஆகணும் அவளைக்கூட அழைத்துச் செல்வதில் சுவாரஸ்யமான கட்டங்கள்-இன்னும் அவை