பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

காதீர்கள். கவனித்தால் கஷ்டப்படுவது நீங்கள் தான். பரிதாப நரம்பு என்பதே எங்களில் இல்லை. முதலில் முளைத்திருந்தால்தானே வளர?”

எதிரே சுவரில் ஒரு காலண்டரிலிருந்து ஒரு புலி-ஒரு கவுதாரியைக் கவ்வியபடி என்னைப் பார்த்துக் கொண் டிருக்கிறது; எத்தனை நாழியாக இந்தக் காலண்டரை எங்கு பிடித்தான்? இதற்காகத்தான் பிடித்தானா? புலிப் பசிக்குக் கவுதாரி கடைவாய் காணுமா?

'ஆனால் இப்போ இதுதான். இவ்வளவுதான் தினே தினே மானும், வரிக்குதிரையும் கிடைத்துக் கொண்டி ருந்தால் சம்மதந்தான். ஏன் நீயே கிடைத்தாலும் எலும்பும் தோலுமானாலும் கிடைத்தவரை லாபம். வெறும் வாயை மென்று கொண்டிருக்கும் இந்நாளில், தேடும் இரையைத் தேர்ந்து எடுக்க முடியுமா என்ன? புலி பசித்தாலும் புல்லைத் தின்னாததெல்லாம் அந்தக்காலம் தம்பி அல்லது அண்ணா அல்லது தாத்தா அல்லது கிழவா." -

ஆளரவம் கேட்டு கிமிர்ந்தேன். ப்ரபு அவசரமாக உள்ளே வந்தான். என்னைக் கண்டதும் ஒரு கணத் தயக்கம். மேசை மேல் கண்களில் மின்னோட்டம். என் வேவு எந்த மட்டும் என்று அவன் வேவு. இதெல்லாம் வேணுமேன்றே அல்ல. கணநேரம் பெரு நேரம். மின் நேரம். அதுவும் அதிகம். (ஒ விட்டுத்தொலை...) நேரே என்னிடம் வந்து என் மாதிரியே சுவர் மேல் சாய்ந்து அமர்ந்தான்.

'உஸ்'-ஒரு ‘தம்'முக்கு வந்திருப்பான், (வந்திருப்பான் என்ன? எனக்கு அவன் கொடுத்திருக்கும் இந்த மரியாதையை நான் மறுப்பானேன்!)