பக்கம்:கேரளத்தில் எங்கோ.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

    • fff برای ه ۶

மோனம்.

நூலின் சிக்கலில் நுனியைத் தேடி இன்னொரு சரடை இழுத்தாகிறது. குரல் அது மாதிரி ஸ்ன்னமாய், தயக்க மாய், முனகலாய்:

ங்ேகள் நினைச்சுண்டிருக்கிற கினைப்பில் நான் வரல்லே. எனக்குத் தெரியாதா? நான் மட்டும் குமரியா? பகலெல்லாம் உழைச்சிட்டு உடம்பு செத்துக் கிடக்கு. நம் மிடையில் இனி என்ன, ஒருத்தருக்கொருத்தர் துணைப் பேச்சுத்தான்-’’

'நம்மிடையில் பேச்சுக்கு என்ன இருக்கிறது?’’

"அப்படி சொல்லிட்டா?'- திடீரென்று அவளுக்கு ஆழுகை வந்து விட்டது. எனக்கு உடம்பும் சரியில்லை. இத்தனை நாள் கழிச்சு வந்தும் இப்படி விஷத்தைக் கக்கனுமா?"

'பிறவிக் குணம் பிறவியோடு தான் போம். சரி நான் இங்கு வந்து ஒரு பகலுமாச்சு. ஒரு இரவுமாச்சு. இன் னொரு பகல் வரப் போறது. இந்திரக் கோழி கத்தப் போறது. உனக்கு என்ன உடம்பு என்று இன்னும் தெரிஞ் சுக்கப் போறேன். இல்லை, ஒருவேளை கான் வந்தவுடனே சரியாய் போயிட்டுதா?’’

'அப்படியே உங்கள் புண்ணியத்தில் குணமானால் நல்லதுதான். கண்ணிரைத் துடைத்துக் கொண்டு உடனே சிரித்தாள். அவளுடைய பலவீனம் அது தான். பலமும் அதுதான். பலவீனமே பலம்-கவர்ச்சி.

'மதுரம் t இன்னும் கொஞ்சம் ரோசத் தைக் கொண் டாடினால் உனக்கே நல்லது.'