பக்கம்:கேள்வி நேரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 9

கார்த்தியாயினி : ஆந்திர மாநிலம்.... அப்புறம். அப்புறம்...

பொன் : மேற்கு வங்காளத்திலும் அதிகமான பனை மரங்களைக் காணலாம். சரி... இதோ இந்தப் படத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா?

பழனி: பெர்னார்ட்ஷா.

பொன் : இல்லை, நம் இந்தியாவின் தலைசிறந்த தேச பக்தர்களில் ஒருவர். ’சுயராஜ்ஜியம்’ என்ற சொல்லை முதல் முதலாகப் பயன்படுத்தியவர்... இன்னுமா தெரியவில்லை?

கார்த்தியாயினி : தாதாபாய் நெளரோஜி.

பொன்: சரியான விடை. பிரிட்டிஷ் பாராளுமன்றத்திற்கு முதல் முதலாகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற இந்தியர் இவர்தான். 1906-ஆம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/11&oldid=494364" இலிருந்து மீள்விக்கப்பட்டது