பக்கம்:கேள்வி நேரம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


விஜி: ஏனக்கா, ஆறுகளே இல்லாமல்கூட ஒரு நாடு இருக்குமா?

உமா: இருக்கே, கனகசபை, உ ன க் கு த் தெரியுமா?

கனகசபை: ஆப்பிரிக்கா.

உமா : ஆப்பிரிக்காவா? அங்கேதான் பெரிய பெரிய ஆறுகளெல்லாம் இருக்கின்றன. உலகிலேயே மிக நீளமான நதி அங்குதானே இருக்கிறது ?

யாழினி: . அதன் பெயர் எனக்குத் தெரியும், நைல் நதிதானே?

உமா : ரொம்பச் சரி.

விஜி: ஆறுகள் இல்லாத நாடு ஆஸ்திரேலியாதான்.

உமா: ஆறு என்ற சொல் ஆ என்ற எழுத்திலே தொடங்குது. அதனாலே கனகசபையும் நீயும் 'ஆ' விலே தொடங்குகிற நாடாய்ப் பார்த்துச் சொல்கிறீர்களா? யாழினி, உனக்குச் சரியான விடை தெரியுமா?

யாழினி: இல்லே அக்கா, நீங்களே சொல் லிடுங்க.

உமா: ஆறுகளே இல்லாத நாடு அரேபியா தான்! அங்கே எங்கு பார்த்தாலும் பாறைகளும், மணலுமாகவே இருக்கும். மூன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/25&oldid=484611" இலிருந்து மீள்விக்கப்பட்டது