பக்கம்:கேள்வி நேரம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


அப்போது திருஞானசம்பந்தர், அப்பரே!' என்று அவரை அழைத்தார். அது முதல் எல்லோரும் அவ்வாறே அழைத்தார்கள்.

துறைமுகங்களில், இயற்கைத் துறைமுகம், செயற்கைத் துறைமுகம் என்று இரு வகை உண்டு. சென்னைத் துறைமுகம் இயற்கைத் துறைமுகமா, செயற்கைத் துறைமுகமா ?

தங்கம் : இயற்கைத் துறைமுகம்தான்.

சிவம் : இல்லை.

ஜோதி: செயற்கைத் துறைமுகம்தான்.

சிவம் : ஆண் குழந்தை இல்லையென்றால் பெண் குழந்தைதானே! இயற்கைத் துறைமுகம் இல்லை என்றேன். உடனே செயற்கைத் துறைமுகம் என்று சொல்லிவிட்டாய். கெட்டிக்காரிதான்.

சரி...பறவை இனங்களில் பெண் பறவை முட்டை இட்டாலும் ஆண் பறவை, பெண் பறவை இரண்டுமே அடைகாக்கும் ஆனால், ஆண் பறவை மட்டுமே அடைகாக்கும் இனம் ஒன்று உண்டு. அது எந்தப் பறவை என்று சொல்ல முடியுமா?

முத்து : மயில்.

சிவம் : இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/47&oldid=484631" இலிருந்து மீள்விக்கப்பட்டது