பக்கம்:கேள்வி நேரம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50


உண்டாக்கும் வழியைக் கண்டு பிடித்ததற்காக இருவருக்கும் 1985ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. சரி, கதர்த் துணி என்றால் என்ன ?

முத்து:என்னண்ணா இது, இதுகூடவா தெரியாது: கையினால் நூற்று நெய்த துணிதான் கதர்த் துணி.

சிவம் : முத்துக்குமார், நீ என்ன சொன்னாய்? கையினால் நூற்று என்றது சரி. அப்புறம் நெய்த துணி என்றாயே, அப்படி என்றால் என்ன?

முத்து : ஆமாண்ணா, கையினாலேயே நெய்த துணி என்றும் சொல்லியிருக்க வேண்டும்.

சிவம் : ஆமாம், கையினாலேயே நூற்றுக் கையினாலேயே நெய்த துணிதான் கதர்...சரி, கடல் குதிரையை யாராவது பார்த்திருக்கிறீர்களா?

தங்கம் : கடல் குதிரையா! நாங்கள் நிலக் குதிரையைத்தான் பார்த்திருக்கிறோம்.

ஜோதி: நான் பார்த்ததில்லை. ஆனாலும் கேள்விப்பட்டிருக்கிறேன் அது கடலில் இருக்கும் ஒரு வகைப் பிராணி. மீன் இனத்தைச் சேர்ந்ததுதானே அண்ணா?

சிவம்: சரியாகச் சொன்னாய் ஜோதி. மீன் இனத்தைச் சேர்ந்தாலும், இது பார்ப்பதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/52&oldid=484636" இலிருந்து மீள்விக்கப்பட்டது