பக்கம்:கேள்வி நேரம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80


யாத்திரை போகிறார்கள். இமய முதல் குமரி வரை நடந்தே சென்று, தம் குருநாதரின் உபதேசங்களைப் பரப்பினார் ஒருவர். அவர் யார்?

லிங்க : சுவாமி விவேகானந்தர்.

தேனி: சரியான விடை, சுவாமி விவேகானந்தர், தம் குருவாகிய இராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசங்களை அப்படித்தான் பரப்பினார்... ரஷ்யர்கள் ஸ்புட்னிக்-2 என்ற செயற்கைக் கிரகத்தில் ஒரு நாயை வைத்து அனுப்பினார் களே, அதன் பெயர் தெரியுமா?

எல்லாரும் : (மெளனம்)

தேனி: என்ன, ஒருவருக்குமே தெரியாதா! அதன் பெயர் லைக்கா. அது பத்திரமாகப் பூமிக்குத் திரும்பி வந்ததால், பிறகு ஒரு மனிதரையே விண்வெளியில் அனுப்பினார் கள். அந்த மனிதர் பெயராவது தெரியுமா?

கார்த்தி : ககாரின்

தேனி: ரொம்ப சரி, யூரி ககாரின் என்ற ரஷ்யர்தான் விண்வெளிக் கலத்தில் முதல் முதலாகச் சென்று பத்திரமாகத் திரும்பி வந்தவர். வாஸ்கோட காமாவைப் பற்றி, வரலாறு படிக்கும்போது நன்கு தெரிந்து கொண்டிருப்பீர்கள். அவர் எங்கே இறந்தார் என்று தெரியுமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/82&oldid=484663" இலிருந்து மீள்விக்கப்பட்டது