பக்கம்:கேள்வி நேரம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86


அலமேலு: ஆம், கிரி சொன்னதே சரி. யூக்கலிப்டஸ் மரத்திலிருந்து இலைகளைப் பறித்து ஒரு பெரிய பாத்திரத்திலே போட்டு, அதிலே நீர் விட்டுக் காய்ச்சு வார்கள். அப்போது பாத்திரத்திலிருந்து குபுகுபுவென்று ஆவிவரும். அந்த ஆவியைச் சேகரித்துக் குளிர வைப்பார்கள். அதுதான் நீலகிரித் தைலம்...இதோ இங்கு நான்கு பிராணிகள் இருக்கின்றன. நத்தை, தவளை, கரப்பான்பூச்சி, பாம்பு இந்த நான்கிலே இரண்டு ஒரு வகையைச் சேர்ந்தவை. மற்ற இரண்டும் வேறொரு வகையைச் சேர்ந்தவை. கண்டுபிடிக்க முடிகிறதா?

சரவணன்: கத்தையும், தவளையும் நீரில் வசிப்பவை, கரப்பான் பூச்சியும் பாம்பும் நிலத்தில் வசிப்பவை.

அலமேலு: சரவணா, நீ சொன்னது சரியான விடையில்லை. பாம்பில் கூடத்தான் தண்ணிர்ப் பாம்பு இருக்கிறது. வேறு யாருக்குத் தெரியும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/88&oldid=484668" இலிருந்து மீள்விக்கப்பட்டது