பக்கம்:கேள்வி நேரம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88


களின் அவசரத் தேவைக்கான நிதி என்று அர்த்தம். யுத்தத்தால் அவதிப்படும் நாட்டுக் குழந்தைகளுக்கு இது மிகவும் உதவி வருகிறது...முதல் முதலில் இந்தியாவில் மின்சார ரயில் எங்கு விடப்பட்டது ?

ஜெயா : பம்பாயில்.

அலமேலு: ஆம். பம்பாயிலிருந்து குர்லா என்ற இடத்துக்கு முதல் முதலாக 1925-ஆம் ஆண்டு மின்சார வண்டி விடப்பட்டது. மெட்ரிக் முறையைத்தான் இப்போது நாம் எல்லோரும் கையாண்டு வருகிறோம். இந்த முறையைக் கண்டுபிடித்தவர் யார்?

கிரி : ஒரு பிரெஞ்சுக்காரர்....பெயர்......தெரிய வில்லை.

அலமேலு : வேறு யாரேனும் சொல்வீர்களா?

எல்லாரும் (மெளனம்).

அலமேலு : நானே சொல்கிறேன். அதைக் கண்டு பிடித்தவர் ஒருவரல்லர், ஏழு பிரெஞ்சுக்காரர்கள் அடங்கிய ஒரு குழுதான் கண்டு பிடித்தது. அந்த ஏழு பேரும் சேர்ந்து ஒன்பது ஆண்டுகளில் கண்டுபிடித்தார்கள். 1790 முதல் 1799 வரை...'சுவரை வைத்துத் தான் சித்திரம் எழுத வேண்டும்' என்று ஒரு பழமொழி இருக்கிறதே, அது எப்படி வந்தது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கேள்வி_நேரம்.pdf/90&oldid=484670" இலிருந்து மீள்விக்கப்பட்டது