பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102


தெற்கேயுள்ள ஹெக்கடதேவன் கோட்டை தாலுகாவில் சேர்ந்திருக்கின்றன. சங்க காலத்தில் இவை வடகொங்கு நாட்டைச் சேர்ந்திருந்தன. காவிரியாற்றின் ஓர் உபநதி யாகிய கபிணி அல்லது கப்பிணி என்னும் ஆற்றங்கரை மேல் கட்டூர் இருந்தது. இவ்வூர் பிற்காலத்தில் கிட்டூர் என்றும் கித்திபுரம் கீர்த்திபுரம் என்றும் வழங்கப்பட்டது.

       கொங்கு நாட்டில் பாயும் ஆறுகளில் வானியாறும் ஒன்று, "சாந்துவரு வானி நீரினும், தீந்தண் சாயலன் என்று இவன் புகழப்படுகிறான்.* இவன் ஆட்சிக் காலத்தில் கொங்கு நாடு முழுவதும் இவனுடைய ஆட்சியின் கீழ் இருந்தது.
       இவனுடைய பெரிய தந்தையான பெருஞ்சேரலிரும் பொறை கொல்லிக் கூற்றம் தகடூர் முதலிய நாடுகளை வென்று கொங்கு இராச்சியத்தோடு சேர்த்துக் கொண்டதை முன்னமே அறிந்தோம். இவனுடைய தந்தையாகிய குட்டு வனிரும் பொறை தகடூர்ப் போரிலோ அல்லது அதற்கு அண்மையில் நடந்த வேறு ஒரு போரிலோ இறந்து போனான் என்று அறிந்தோம். ஆகவே இவன் இளவயதி லேயே ஆட்சிக்கு வந்தான் என்பது தெரிகின்றது. இவன் கொங்கு நாட்டின் வடபகுதிகளை வென்று தன்னுடைய கொங்கு இராச்சியத்துடன் இணைத்துக்கொண்டான்.

வீச்சிப் போர்

இளஞ்சேரல் இரும்பொறை விச்சியூரை வென்றான். விச்சியூர் கொங்கு நாட்டிலிருந்தது. விச்சியூரிலிருந்த விச்சி மலைக்கு இப்போது பச்சைமலை என்று பெயர் வழங்கு கிறது. இங்கு விச்சியூர் என்று ஓர் ஊர் உண்டு. அதன் அரசன் விச்சிக்கோ என்று பெயர் பெற்றிருந்தான். விச்சியூர், மலை சார்ந்த நாடு. விச்சிக்கோ, விச்சியர் பெருமகன்


*9ஆம் பத்து 6:12-13)
**புறம் 200:1-8)