பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119

கிள்ளிவளவன் என்றுங் கூறுவர். குளமுற்றம் குராப்பள்ளி என்னும் இரண்டு இடங்களில் இவன் இறந்து போனான் என்பது இதன் பொருள் அன்று. குளமுற்றம், குராப்பள்ளி இரண்டும் ஒரே இடத்தைக் குறிக்கின்றன. குராப்பள்ளியில் இறந்த கிள்ளிவளவன் வேறு, குளமுற்றத்தில் இறந்து போன கிள்ளிவளவன் வேறு என்று கருதவேண்டா. இரு பெயரும் ஒருவரையே குறிக்கின்றன.[1]

இந்தக் கிள்ளிவளவன் கருவூரை (கொங்கு நாட்டுக் கருவூரை) முற்றுகையிட்டான். அப்போது கருவூர்க் கோட்டைக்குள் இருந்தவன் யானைகட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை. இரும்பொறை வெளியே வந்து கிள்ளிவளவனுடன் போர் செய்யாமல் கோட்டைக்குள்ளேயே இருந்தான். அப்போது ஆலத்தூர் கிழார் என்னும் புலவர் சோழனிடம் வந்து, ‘போருக்கு வராமல் இருக்கிறவனுடன் நீ போர் செய்து முற்றுகை இடுவது தகுதியன்று’ என்று கூறினார். [2]கிள்ளி வளவன் புலவர் சொல்லை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து முற்றுகை செய்தான் ; மாந்தரஞ்சேரல், போருக்கு வராம


  1. * I. A. xxix. P, 250 N. 2 P. 49-57. The Col.s Vol 1 K. A. Nilakanta Sastri (1935)
  2. ** “தண்ணென் பொருறை வெண்மனல் சிதையக் கருங் கைக் கொல்லன் யரஞ்செய் யவ்வாய், நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து,வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவு தொறுங், கடிமரந்தடியும் ஒசை தன்னூர், நெடுமதில் வரைப்பில் கடிமனை இயம்ப, ஆங்கினி திருந்த வேந்தனொ டீங்குநின், சிலைத்தார் முரசங் கறங்க, மலைத்தனையென்பது நாணுத்தக வுடைத்தே.” (புறம் -36 : 5-13) இந்தச் செய்யுளின் அடிக்குறிப்பு “சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் முற்றியிருந்தானைப் பாடியது” என்று கூறுகிறது.)