பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

149

குடிமக்களிடமிருந்து இறை (வரி) தண்டுவதற்குச் சிலர் நியமிக்கப்பட்டிருந்தார்கள். கொங்கு நாட்டில் வரி வசூல் செய்தவர் கோசர் என்பவர். அவர்கள் கண்டிப்புள்ளவர். அவர்கள் ஊர் ஊராகப் போய்ப் பொது அம்பலத்தில், (ஆலமரம் அரச மரங்களின் கீழே) தங்கிச் சங்குகனை முழங்கியும் பறையடித்தும் தாங்கள் இறை வசூல் செய்ய வந்திருப்பதைத் தெரிவித்தார்கள். பிறகு, ஊராரிடத்தில் இறைத் தொகையை வசூல் செய்து கொண்டு போய் அரசனிடங் கொடுத்தார்கள். இந்தச் செய்தியைக் கொங்கு நாட்டில் வாழ்ந்திருந்த ஔவையார் கூறுகிறார்.[1]

இரும்பொறை யரசர்களின் ஆட்சி முறை பற்றி அதிகமாகத் தெரியவில்லை. அவர்களுடைய ஆட்சி சேர சோழ பாண்டியரின் ஆட்சியைப் போலவே இருந்தது என்பதில் ஐயமில்லை.


  1. (“பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறை கொள்பு, தொன் மூதாலத்துக் பொதியிற் றோன்றிய, நாலூர்க் கோசர் நன்மொழிபோல, வாயாகின்றே.” (குறும்-15 : 1-4)