பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154


களில் இருந்து தவஞ் செய்தார்கள். அவர்களைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் அதிகமாகக் காணப்படவில்லை. அக் காலத்துத் துறவிகள் குன்றுகளிலும் மலைகளிலும் தங்கி யிருந்து தவஞ் செய்ததைச் சங்கச் செய்யுளிலிருந்து அறிகிறோம்.

"பொரியரை ஞெமிர்ந்த புழற்காய்க்கொன்றை
நீடிய சடையோ டாடா மேனிக்
குன்றுறை தவசியர் போலப் புலவுடன்
என்றூழ் நீளிடைப் பொற்பத் தோன்றும்
அருஞ்சுரம்.” (நற்றினை, 141:3-7)

(ஞெமிர்ந்த - பரந்த. கொன்றை - சரக்கொன்றை மரம். புழற்கால் - துளை பொருந்திய, ஆடாமேனி -- அசையாத உடம்பு, அசையாமல் தியானத்தில் அமர்ந்திருத்தல், நீராடாத உடம்பையுடையவர் என்றும் பொருள் கூறலாம். ஜைன முனிவர் நீராடக்கூடாது என்பது அவர்கள் கொள்கை. தவசியர் - தவம் செய்வோ .)

ஆனால், கொங்கு நாட்டு மலைக்குகைகள் சிலவற்றில் காணப்படுகிற கற்படுக்கைகளும் அங்கு எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக்களும் அக்காலத்தில் அங்கே பௌத்த சமண சமய முனிவர்கள் தங்கியிருந்ததைத் தெரிவிக்கின்றன. அந்த முனிவர்கள் கல்லின்மேலே படுப்பது வழக்கமாகையால் ஊரார் மலைக் குகைகளிலுள்ள கரடுமுரடான பாறைகளைச் சமப்படுத்திப் பாயுந் தலைய ணையும்போல வழவழப்பாக அமைத்துக் கொடுத்தார்கள். அவைகளை அமைத்துக் கொடுத் தவர்களின் பெயர்கள் அப்படுக்கைகளின் அருகில் பிராமி எழுத்தினால் எழுதப்பட்டன. அந்தக் கற்படுக்கைகளும் எழுத்துக்களும் இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆர்க்கியாலஜி எபிகிராபி சான்றுகளினாலே அக் காலத்தில் கொங்கு நாட்டிலும் சமண பௌத்தர்கள் இருந்