பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

கொடுத்துக் கறியை (கறி-மினகு) ஏற்றிக்கொண்டு போயின என்று சங்கப் புலவர் தாயங்கண்ணனார் கூறுகிறார்.

சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வினைமான் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி'. (அகம்: 149:7-11)

முசிறித் துறைமுகம் யவனர்களின் பெரிய மரங்கலங்கள் வந்து தங்குவதற்குப் போதுமான ஆழமுடையதாக இல்லை. ஏனென்றால், அங்குக் கடலில் கலந்த பெரியாறு மண்ணை அடித்துக்கொண்டு வந்து ஆழத்தைத் தூர்த்து விட்டது அதனால் ஆழமில்லாமற் போகவே யவன மரக்கலங்கள் துறை முகத்துக்கு அப்பால் கடலிலே நங்கூரம் பாய்ச்சி நின்றன.

மிளகு மூட்டைகளைத் தோணிகளில் ஏற்றிக்கொண்டு போய்க் கடலில் நின்றிருந்த யவன மரக்கலங்களில் ஏற்றி விட்டு அதற்கு ஈடாக யவனப் பொற்காசுகளைத் தோணிகளில் ஏற்றிக்கொண்டு வந்தார்கள் என்று பரணர் என்னும் சங்கப் புலவர் கூறுகிறார்.

மனைக் குவைஇய கறிமுடையாற்
கலிச்சும் மைய கரை கலக்குறுந்து
கலந்தந்த பொற் பரிசம்
கழித்தோணியாற் கரைசேர்க்குந்து

... ... ...

புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழுங்குகடல் முழவின் முசிறி! (புறம்-343:3-10)

யவன மரக்கலங்கள் மிளகை ஏற்றுமதி செய்து கொண்டு போனதை இப்புலவர்கள் நிகழ் காலத்தில் கூறுவதைக் காண்க. அக்காலத்தில் மிளகு கிரேக்கர் உரோமர்