பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

கூறப்படுகிறார். இவருடைய பெயர்க் காரணத்தைப் பற்றிப் பெரிய தலையையுடையவராதலிற் பெருந்தலைச் சாத்தனார்’ எனப்பட்டார் போலும் என்று பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயரவர்கள் நற்றிணைப் பாடினோர் வரலாற்றில் எழுதுகிறார். இது ஏற்கத்தக்கதன்று. சாத்தனார் என்னும் பெயருள்ள இப்புலவர் பெருந்தலை என்னுமூரில் இருந்தது பற்றிப் பெருந் தலைச் சாத்தனார் என்று பெயர் பெற்றார் என்று கருதுவது பொருத்தமானது. கொங்கு நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கோபிசெட்டிப்பாளையம் தாலுகாவில் பெருந்தலையூர் என்னுமூர் இருக்கிறது. இப்புலவர் அவ்வூரினராக இருக்கலாம். பெந்தலையூர் சாத்தனார் என்பது சுருங்கிப் பெருந்தலைச் சாத்தனார் என்று வழங்கப்பட்டது.

அகநானூற்றில் 13, 224- ஆம் செய்யுள்கள் இவர் பாடியவை. அகய் 13-ஆம் செய்யுளில் 'தென்னவன் மறவனாகிய கோடைப் பொருநன்' என்பவனைக் குறிப்பிடுகிறார். இவன் பாண்டியனுடைய சேனைத் தலைவன் என்பதும் கோடைக்கானல் மலைப்பகுதியை இவன் ஆண்டான் என்பதும் தெரிகின்றன. நற்றிணை 282-ஆம் செய்யுளும் , இவர் பாடியதே இவர் பாடிய ஆறு செய்யுட்கள் புறநானூற்றில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

புறம் 151-ஆம் செய்யுளின் கீழ்க்குறிப்பு, ‘இளங்கண்டீ ரக்கோவும் இளவிச்சிக்கோவும் ஒருங்கிருந்த வழிச் சென்ற பெருந்தலைச் சாத்தனார் இளங்கண்டீரக்கோவைப் புல்லி இளவிச்சிக் கோவைப் புல்லாராக. என்னை என் செயப் புல்லீரா யீனீரென, அவர் பாடியது’ என்று கூறுகிறது. கண்டிரக்கோ விச்சிக்கோ என்பவர்கள் கொங்குநாட்டுச் சிற்றரசர்கள், கொங்கு நாட்டுக் குதிரை மலை நாட்டை யரசாண்ட குமணனை அவன் தம்பி காட்டுக்கு ஓட்டிவிட்டுத் தான் அரசாண்டான். வறுமையினால் துன்புற்ற பெருந்தலைச் சாத்தனார் காட்டுக்குச்