பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

217

ஐந்தாவது எழுத்து ம அல்லது ம் என்பது. புள்ளியில்லையானாலும் ம் என்றே வாசிக்கலாம். ஐ. மகாதேவனும் டி.. வி. மகாலிங்கமும் ம் என்றே சரியாக வாசித்துள்ளனர். சாசன எழுத்து இலாகா இந்த எழுத்தை ப் என்று படித்திருக்கிறது. இவ்வெழுத்து ம் என்பதில் ஐயமில்லை முதல் ஐந்து எழுத்துக்களையும் சேர்த்துப் படித்தால் எழுத்தும் என்றாகிறது.

இனி அடுத்த ஆறு எழுத்துக்களை (6 முதல் 11 வரை)ப் பார்ப்போம். 6வது எழுத்து பு என்பது. 7வது எழுத்து ண என்பது. 8வது எழுத்து ரு என்பது. சாசன இலாகா இதை ர என்றும் ர் என்றும் வாசிக்கிறது. டி. வி. மகாலிங்கம் த என்றும், ஐ. மகாதேவன் வ (வி) என்றும் வாசிக்கிறார்கள். இது பிராமி ரூ என்பதில் ஐயமில்லை. ர் என்று இருக்க வேண்டிய இது ரு என்று எழுதப்பட்டிருக்கிறது. 9- ஆம் பத்தாம் எழுத்துக்கள் த்தா என்பன. 11வது எழுத்து ன் என்பது. இந்த எழுத்துக்களை ஒன்றாகச் சேர்த்தால் புணருத் தான் என்றாகிறது. ஐ. மகாதேவன் இவற்றைப் பண்வித்தான் என்றும் டி., வி, மகாலிங்கம் பூணதத்தான் என்றும் வாசிப்பது சரியாகத் தோன்றவில்லை. சாசன இலாகா படித்துள்ள புணர்த்தான் அல்லது புணருத்தான் என்பதே சரியென்று தெரிகிறது. ஆகவே, முதல் பதினொரு எழுத்துக்களைச் சேர்த்து வாசித்தால் எழுத்தும் புணர்த்தான் என்றாகிறது.

இனி முதல் வரியில் உள்ள கடைசி மூன்று எழுத்துக்களைப் பார்ப்போம். பன்னிரண்டாவது எழுத்து ம என்பது.

இதற்கு அடுத்த (13 வது) எழுத்து சரியாக எழுதப் படாததால் பலவித ஊகங்களுக்கு இடமளிக்கிறது. எழுத்தைப் பொறித்த கற்றச்சனுடைய கவனக் குறைவினால் ஏற்பட்ட

கொ-14