பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224


“நல்லிய ஊர்ஆ பிடந்தை மகள் கீரன்கொற்ற...”

இவ்வாறு வாசித்த இவர் நல்லியூர் பிடந்தையின் மக்களான கீரன், கொற்ற(ன்)” என்று விளக்கங் கூறுகிறார். மகள் என்பதை மக்கள் என்று கூறுகிறார்.*[1]


திரு. மகாலிங்கம் நாளாளப ஊர் என்று படிப்பது தவறு. திரு மகாதேவன் நல்லி ஊர் என்று படிப்பது ஓரளவு சரி. 7ஆவது எழுத்தை மகாலிங்கம் அடியோடு விட்டுவிட்டார். மகாதேவன் அவர்கள் அதைப் பிராமி அ என்று வாசித் துள்ளார். அது பிராமிப் என்னும் எழுத்தாகும். மகாலிங்கம் ‘மகன்' என்று படிப்பது சரி. மகாதேவன் மகள்' என்று வாசித்து 'மக்கள்' என்று பொருள் கூறுவது சரியெனத் தோன்றவில்லை. மகன் என்பதே சரியானது. கீரன் கொற்றன் என்பது ஒரே ஆளின் பெயர் என்று மகாலிங்கம் கூறுவது சரி. கீரன், கொற்றன் என்று இரண்டு ஆட்கள் என்று மகாதேவன் கூறுவது சரியெனத் தோன்றவில்லை.

இந்த எழுத்துக்களை நாம் படித்துப் பொருள் காண்போம்.

“நள்ளிவ்டீர்ப் பிடந்தை மகன் கீரன் கொற்ற(ன்)" என்பது இதன் வாசகம். கொற்றன் என்பதில் கடைசி எழுத் தாகிய ன் சாசனத்தில் இல்லை.

இதை விளக்கிக் கூறுவோம்.

முதல் மூன்று எழுத்துகளை நள்ளி என்று படிப்பதே சரியாகும். பிராமி எழுத்துகளில் ல, ள எழுத்துகளுக்கு


  1. * (No. 18. p. 66 Seminar on Inscriptions 1966. Historical Tamil Inscriptions. Iravatham MahaDevan. Paper read at the Tamil conference Seminar held at Kula Lumpur, 1966)