பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

சங்கவை என்பவரைக் கபிலர் இருங்கோவேள் அரசினிடம், அழைத்து வந்து மணஞ் செய்து கொள்ளும்படி கேட்டார். இருங்கோவேள் மறுத்து விட்டான், (இச்செய்திகளையெல்லாம் புறம். 201, 202-ல் காண்க.) தலையாலங்கானத்தில் சேரனும் சோழனும் பாண்டியன் நெடுஞ்செழியனுடன் போர் செய்த போது சேர சோழர்களுக்கு உதவியாக இருந்த ஐந்துவேள் அரசர்களில் இருங்கோவேளும் ஒருவன். “தேங்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின், இருங்கோ வேண்மான்” (அகம். 36:18-19) இருங்கோவேளுடன் எருமையூரனும் அப்போரில் கலந்து கொண்டான்.

குறிப்பு: சங்கச் செய்யுள்களில் இவ்வளவு தெளிவான நல்ல சான்று இருந்துங்கூட, அதனைச் சரியாகத் தெரிந்து கொள்ளாமல், கிருஸ்து சகாப்தத்தின் தொடக்கக் காலத்தில் மைசூருக்கு எருமை நாடு என்று பெயர் இருந்ததில்லை என்று ஒரு சரித்திரக்காரர் எழுதுகிறார். பழைய கர்நாடகம்: துளுவ நாட்டு வரலாறு என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதிய பாஸ்கர் ஆனந்த சாலிதொரே என்பவர் இது பற்றி இவ்வாறு எழுதுகிறார்: “எருமை நாட்டுக்கு மேற்கில் துளுநாடு இருந்தது என்று அகம் 294 ஆம் செய்யுள் கூறுகிறது. கிருஸ்து சகாப்தத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் மைசூருக்கு அந்தப் பெயர் (எருமை நாடு என்னும் பெயர்) இருந்தது என்பதற்குச் சான்று இல்லை என்று கூறலாம். சங்க காலத்துப் புலவர்கள் கர்நாடக தேசத்தின் பழைய பெயர்களைக் கூறாதபடியினாலே உதாரணமாகக் கழபப்பு (இப்போதைய சந்திரகிரிமலை) புன்னாடு, குந்தளநாடு முதலியன கி. பி. முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டுகளில் மைசூர் (எருமை நாடு) மகிஷ மண்டலத்தைக் குறிக்கிறது என்னும் கருத்தை ஒதுக்கி விடலாம். ஆகவே அகம். 294 ஆம் செய்யுள் பழைய துளு நாட்டின் பழமையை, தீர்மானிப்பதற்கு உதவவில்லை.”[1]


  1. * Ancient Karnataka. Vol. I. History of Talura. Baskar Anand. Saletore 1936)