பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

பாண்டியனும் சோழனும் உதவியாக இருந்தார்கள். ஆனாலும் இளஞ்சேரல் இரும்பொறை விச்சியை வென்று அவனுடைய ஐந்தெயில் கோட்டையைக் கைப்பற்றினான்.[1]

கட்டியரசர்

கொங்கு நாட்டின் ஒரு பகுதியை ஆதிகாலம் முதல் அரசாண்டவர் கட்டி என்னும் பெயர் பெற்ற பரம்பரையரசர். கட்டியர் அரசாண்ட பகுதி வடகொங்கு நாட்டில், வடுகதேசமாகிய கன்னட தேசத்தின் தெற்கு எல்லையைச் சார்ந்திருந்தது.[2] வடகொங்கு நாட்டின் வடமேற்கில் இருந்த புன்னாட்டின் தலைநகரமான கட்டூரின் மேல் சோழனுடைய சேனைத் தலைவனான பழையன் படையெடுத்துச் சென்று போர் செய்தபோது புன்னாட்டு அரசனுக்கு உதவியாகப் பழையனை எதிர்த்துப் போர்செய்த கொங்கு நாட்டு அரசர்களில் கட்டி யரசனும் ஒருவன். [3]ஒரு கட்டியரசன், உறையூரையாண்ட தித்தன் வெளியன் என்னுஞ் சோழன்மேல் போருக்குச் சென்று உறையூர்க் கோட்டையை யடைந்தபோது, கோட்டைக்குள் தித்தன் வெளியனுடைய பிறந்தநாள் விழாக் கொண்டாட்டத்தில் கிணைப்பறை கொட்டப்பட்ட முழக்கத்தைக் கேட்டு போர் செய்யாமல் திரும்பிப் போய் விட்டான்.[4]


  1. * ‘வெருவரு தானையொடு வெய்துறச் செய்து சென்று இருபெரு வேந்தரும் விச்சியும் வீழ வருமினைக் கல்லகத் ததந்தெயில் எறிந்து’ (9-ம் பத்து பதிகம்)
  2. குல்லைக் கண்ணி வடுகர் முனையது, பல்வேற் கட்டி தன்னாட்டு உம்பர், மொழி பெயர் தேயம். (குறும். 11:5:7)
  3. “தன்னன் ஏற்றை நறும்பூண் அத்தி, துன்னருங் கடுந்திறல் கங்கள் கட்டி, பொன் அணி வல்வில் புன்றுறை என்றங்கு. அன்றமர் குழீஇய அளப்பருங் கட்டூர்ப், பருந்துபடப் பண்ணி பழையன்பட்டென” (அகம். 44:7-11)
  4. “தித்தன் வெளியன் உறந்தை நாளவைப், பாடின் தெண்கிணைப் பாடுகேட்டஞ்சிப் போரடுதானை கட்டி, பொராஅ தோடிய ஆர்ப்பு”(அகம். 228: 14-7)