பக்கம்:கொங்கு நாட்டு வரலாறு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

களை கூறுகின்றது.* இதில் கீழ்க்கண்ட அரசரின் வழிமுறை கூறப்படுகிறது. ராஷ்ட்ரவர்மன், இவன் மகன் நாகதத்தன். இவன் மகன் புஜகன். (இவன் சிங்கவர்மன் மகளை மணஞ் செய்து கொண்டான்.) இவனுடைய மகன் ஸ்கந்தவர்மன். இவனுடைய மகன் இரவிதத்தன்.**

(புன்னாட்டரசர் பரம்பரையில் கடைசி அரசனுக்கு ஆண் பேறு இல்லாமல் ஒரே ஒரு பெண் மகள் மட்டும் இருந்தாள் கங்க நாட்டரசன் அவனிதனுடைய மகனான துர்வினிதன் (கி. பி. 482-517) புன்னாட்டரசனுடைய மகளை மணஞ் செய்து கொண்டான். அதன் பிறகு புன்னாடு கங்க நாட்டுடன் இணைக்கப்பட்டது.)

கடைச் சங்க காலத்தில் புன்னாடு வடகொங்கு நாட்டைச் சேர்ந்திருந்தது.

சாலிதொரே என்பவர் புன்னாடு சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படவில்லை என்று தவறான, உண்மைக்கு மாறான, செய்தியைக் கூறுகிறார்.***

சங்க இலக்கியத்தில் கூறப்படுகிற எருமையூரன் (எருமை நாடன்) என்பவனுடைய எருமையூர், பிற்காலத்தில் மைசூர் என்று பெயர் பெற்றது என்றும் (எருமை-மகிஷம், எருமை ஊர்-மகிஷ ஊர், மைசூர்) மைசூர் என்னும் பெயரே பிற் காலத்தில் கன்னட நாடு முழுவதுக்கும் வழங்கப்படுகிறது என்றும் ஆராய்ச்சிக்காரர்கள் கூறுகிற உண்மை . இதைச் சாலிதொரெ மறுக்கிறார். மறுப்பதற்கு இவர் கூறுகிற காரணம் தவறாக இருக்கிறது. கர்நாடக தேசத்திலிருந்த பழைய பெயர் களான கழபப்பு (இப்போதைய சந்திரகிரி), புன்னாடு, குந்தளம் முதலிய பெயர்கள் சங்கச் செய்யுள்களில் கூறப்படாதபடியால் ________________________

  • (Indian Antiquary xii 13, xviil 366)
    • P. 146. Mysore and Coorg from its Inscriptions. B. Lewis Rice

1909. 146 |

      • p. 51. Ancient Karnataka, Voll I History of Tuluav

B.A. Seletore 1936.