பக்கம்:கொடி முல்லை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாணிதாசன்

15



வியப்போடு கற்றச்சன் புலவன் நோக்கி
மீறிவரும் சிரிப்படக்கி, 'இல்லை! இல்லை!
கயற்கண்ணாள் என்இன்பத் தலைவி; உள்ளக்
கடலலைக்கும் கதிர்க்கற்றை1 இந்த ஊரின்
அயலுள்ள சோலையிலே என்றன் உள்ளம்
அள்ளிவிட்டாள் வரும்போதே; அந்நாள் தொட்டுச்
செயலற்றேன்; இளவரசி மூங்கில் தோளைச்
சேரவழி செய்திடுவாய் தோழா!' என்றான்.

'பித்தமென் றன் தலைக்கேறி விட்டதென்று
பேசாமல் இருக்கின்றாய் போலும் தோழா!
எத்திக்கும் கற்சிலையால் தமிழர் பண்பை
எதிர்நிறுத்தம் அழகனறி விழப்ப துண்டோ?
தித்திக்கும் கற்சிலையால் தமிழர் பண்பை
எதிர்நிறுத்தும் அழகனறி விழப்ப துண்டோ?
தித்திக்கும் அவள் வாய்ச்சொல் இதோ என் காதில்
பிழைஇன்றிக் கேட்கின்றேன்; இதழின் மேலே
தத்துகின்ற அவள்நகையென் கண்ணிற் றோன்றும்
கடைத்தேற வழியெனக்குச் சாற்றாய் தோழா!'

நலம்பாடி அவன் வாயைப் பொத்திச் சொல்வான்.
'நாட்டுநிலை அறியாத புதிய வன்நீ;
உலைவைத்துக் கொள்கின்றாய் நீதான் உன்றன்
உயிருக்கே; காதுண்டு சுவர்கட் கெல்லாம்;
வலைவீசு வாருண்டா முழும திக்கு?
மறிகடலை வயலாக்க முனைவா ருண்டா?
மலையினுக்கும் மடுவிற்கும் உள்ள வேறு
பாடுனக்கும் அவளுக்கும்; கூடா' தென்றான்.

'காதலென்று பிதற்றுகின்றாய்; அவளோ இந்தக்
கழுக்குன்றத் திளவரசி, மான வன்மன்
காதலியாய் மணம்பெற்று வாழ்வாள்; நீயோ
கலைக்கோயில் முடித்தரசன் பரிசைப் பெற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடி_முல்லை.pdf/21&oldid=1252895" இலிருந்து மீள்விக்கப்பட்டது