பக்கம்:கொடு கல்தா.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

— 44- அடையவும் புல் பூண்டுகள் முளைத்துப் பாழடையவும் விடப்பட்டுள்ள பெரிய பெரிய கோயில்கள் எல்லாம் எண் ணற்றவர்களுக்குத் தங்குவதற்கு வசதியும்,தொழில் வளர்ச்சிக்கும் ஆலைகளும் கல்விச்சாலைகளும் அமைக்க இடவசதியும் தரமுடியும். இவற்றில் முடங்கிக் கிடக்கிற செல்வத்தை சமுதாய நலனுக்குப் பயன்படுத்த வேண்டும். நாட்டிலே வெறும் வெளிகளாக கட்டாந்தரைகளாக, தரிசு நிலங்களாக எவ்வளவோ இடம் காலி கிடக்கிறது. இவற்றில் நிலத்துக்குத் தக்க பயிர்வகைகளோ, மரம் செடி கொடிகளே வளர்ப்பதற்குரிய ஏற்பாடுகள் செய்யலாம். அதற்கு அவசியமான ஆராய்ச்சிகள் செய்யவேண்டும். மேல் நாடுகளிலே பாலைவனங்களைக்கூட பசுஞ்சோலைக ளாக்கி விடுகிறார்கள். கட்டாந்தரைகளே கனி குலுங்கும் விளை நிலங்களாக மாற்றும் திட்டங்கள் கண்டு, கூட்டுப் பண்ணையாக உழைப்பைச் செலுத்தி நாட்டுக்கு நல்லது செப்கிறாள்கள். ரஷ்யாவில் ஐந்து வருஷத் திட்டங்கள் மூலம் எவ்வளவு அற்புதங்கள் செய்திருக்கிறார்கள்! இன்னும் செய்கிறார்கள். வறண்ட பூமியாய் கிடந்த ஆஸ்திரேலியாவிலே ஆர்ட்டிஷியன் ஊற்றுக்கள் அமைத்து விளைச்சல் நிலமாக எவ் வளவோ இடங்களைத் திருத்தியுள்ளனர். . வற்றாத ஜீவ சதிகள் ஓடுகிற நம் நாட்டிலோ பஞ்சமும் பட்டினியும்! தண்ணீர் ஓடி ஒடிக் கடலிலே விழுந்து வீணாகிறது. கங்கையை வாய்க்கால் வெட்டிக்கொண்டு வந்து இங்கு வளமாக்க வேண்டும் என்கிற கவிக்கனவு. விண் கனவாகவே இருக்கலாம். ஆனால் வருஷத்தில் பாதி மாதம் வீணாக ஓடுகிற காவேரித் தண்ணீரைப் பயன்படுத்த என் திட்டங்கள் வகுக்கக் கூடாது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொடு_கல்தா.pdf/44&oldid=1395945" இலிருந்து மீள்விக்கப்பட்டது