பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மாணவர் நல்லவரே 145 மற்றொன்றும் கோக்க வேண்டும். பாடத்திட்டங்கள் மாணவர் வருங்கால வாழ்வுக்குப் பயன் தரத்தக்கதாக அமைய வேண்டும். பள்ளிகளில் பாடத்திட்டம் வகுக்கும் முறையை அவ்வத்துறையில் வல்லவர்கள் வழியே ஒப்ப டைத்தல் வேண்டும். அதுபோன்றே தேர்வு முறையிலும் அடிக்கடி மாற்றங்கள் செய்து மாணவரைத் திண்டாட விடாது, அமைதியான ஒரு முறையில் நல்ல அறிவறிந்து அவ்வத்துறையில் தேர்ச்சிபெற்ற வல்லவர்வழித் தேர்வு களை நடத்த வேண்டும். மாணவர் பயிலும் கல்வி அவர் தம் வாழ்வுக்கு வழி காட்டியாக அமைய வேண்டுமேயன்றி • அடகெடுவாய் பல தொழிலும் இருக்கக் கல்வி அதிகமெனக் கற்றுவிட்டோம் அறிவிலாமல்' என்று வாடும் வகையில் கல்வி நெறியை அமைக்கலாகாது. இன்று அத்துறையில் கல்வி இல்லாத காரணம் தான் மாணவர்களை வேற்றுத் துறைக்குச் செல்லத் தூண்டுகிறது. மேலை நாடுகளின் கல்வி நிலையினைக் கண்டுவரும் பலர் அங்குள்ள கல்வி முறைகளுக்கும் இங்குள்ள முறைகளுக்கும் வேறுபாடுகள் உண்டு என்கின் றனர். அதற்காக- அவற்றை ஆக்குவ தற்காக- அரசாங்கச் செவவில் செல்லும் நல்லன்பர்கள் அத்துறை வழிகளை ஆராய்ந்து அவற்றுள் நல்லனவற்றை நம் நாட்டில் செயலாக்க முயல வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகப் பள்ளியிலும் கல்லூரி யிலும் நல்ல ஒழுக்க நெறி ஓம்பும் வல்லவர்களை யே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். செயலாற்றும் திறனும் செம்மை உளமும் உள்ளவர்கள் முதல்வர்களாக வும் ஆசிரியர்களாகவும் வருவார்களாயின் அது கல்வித துறைக்கு நலமாகும், இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டு போகலாம். இவற்றைப் பலர் நினைக்கின்றனர். எனினும் வெளியில் சொல்ல அஞ்சுகின்றனர். என்றாலும் ஒருநாள் சொல்லித்தானே ஆகவேண்டும். எனவே