பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 கொய்த மலர்கள் அது தேவைப்பட்டது. விலங்கொடு விலங்காகத் திரிந்து கண்டதைத் தின்று வாழ்ந்த அந்தப் பழம்பெருங் காலத்திலேயே அவனுக்குத் தன் உடலை மறைக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றிற்று. மனித உணர் வின் முதற்படியிலேயே இவ்வாடைபற்றி உணர்வு பிறந்தது. ஆனால், அக்காலத்தில் மரவுரியும். விலங்குகளின் தோல்களுமே ஆடைகளாக அமைந்தன. ஆயினும் காலம் செல்லச் செல்ல அவன் பாட்டினும், மயிரினும், பருத்தி நூலினும் பலப்பல வகையான ஆடைகளைச் செய்யக் கற்றுக் கொண்டான், இன்று அத்துறையில் அவன் மிக அதிகமாக முன்னேறிவிட்டான் என்றே சொல்ல வேண்டும். தமிழ் நாட்டில் பல ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே ஆடை நெய்யும் வழக்கமும், அதற்குப் பல்வேறு வகைப் பட்ட வண்ணங்கள் இட்டு வளம்படுத்தும் வழக்கமும் இருந்தன என நாம் காண்கின்றோம்: நாகரிக வாழ்வின் உச்சியில் வாழ்ந்த தமிழ் மக்கள், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு. முன்பிருந்தே நல்ல நல்ல வண்ண ஆடைகள் உடுத்திச் சிறந்தனர் என்பதை நாம் இலக்கியங்கள் வழிக் காண முடிகின்றது. சங்க காலத்தில் ஆடவரும் மகளிரும் அழகழகாக ஆடைகள் புனைந்தும், விழா ஆற்றியும் சிறந்தார்கள் என்பதைக் காண்கின்றோம். அவ்வாடைகள் கண்கவர் வண்ணங்களால் அழகுபடுத்தப்பட்டதையும் அறிகிறோம். ஆடைகள் மிக மெல்லிய இழைகளை உடையன வாக இருந்தன. * இழைமருங்கு அறியா நுழைநூற் கலிங்கம் எள்ளறு சிறப்பின் வெள்ளரைக் கொளீஇ' (பலைபடு 361-62} | என்றும், (பெரும்பாண் 469] -என்றும்,