பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வண்ண ஆடைகள் 25

  • மாசில், காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇ;

[சிறுபாண் 239) என்றும், அக்காலத்து மக்கள் உடுத்திய ஆடைகளைப் பற்றிப் பத்துப்பாட்டு அழகாக எடுத்துக் காட்டு கின்றது. இவற்றின் வழி நாம் காணின் ஆடைகள் எத்துணை மெல்லிய இழைகளால் நெய்யப் பெற்றன வென்பதை அறிய முடியும். பால் ஆவியைப் போன்ற மிக மெல்லிய ஆடைகளை அவர்கள் நெய்து அணிந்து இருந்தார்கள். இக்காலத்தில் அகத்துள்ளதை வெளிக் காட்டும் ஆடைகள் அதிக வழக்கத்தில் உள்ளதைக் காண்கின்றோம். 'ஆவியன்ன அவிர் நூற் கலிங்கம்' அத் தகையதாக இருந்திருக்கலாம். மிக நுண்ணிய இழை களால் நெய்யப்பட்டு ஒளியும் விடும் வகையில் நன்கு சிறந்திருந்த ஆடை அது. அது தனித்து மகிழும் காதலர் மருங்கு அறியாக் கலிங்கமும்' அத் தகையதே போலும். ஆடையில் பின்னப்பட்ட இழைகள் பிரித்தறிய முடியாத படி அவ்வளவு நுண்மையினவாக இருந்தன என அறி கிறோம். எனவே, அக்காலத்து ஆடைகள் மிக மெல்லிய இழைகளால் செம்மையாக நெய்யப்பட்டன எனக் கொள்ளல் பொருந்தும். கலிங்கம் என்பது ஆடைக்குப் பெயர். அத்தகைய ஆடை கலிங்க நாட்டிலிருந்து வந்த தாக இருக்கலாம். இனி, அவ்வாடைகளை அழகு செய்யும் முறையால் பலவகைப்பட்ட வண்ண நிறங்களை இட்டமையையும் காணலாம். 'மாசில் காம்பு சொலித்தன்ன அறுவை' என்ற அடியில் 'காம்பு' என்பது கரைக்குப் பெயர். ஆடைகள் பல வண்ணங்களால் அழகுபடக் கரையிட்டுச் சிறந்தன என அறிய முடிகிறது. அக்கரை குற்றமற்றுக்