பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலச் சைவம் சங்க காலம்: தமிழ் நாட்டு வரலாறும் காலம் கடந்தது; சைவ சமய வரலாறும் காலம் கடந்தது. இரண்டையும் இணைத்துக் காலந்தொறும் சைவம் வளர்ந்த வர லாற்றை விளக்கும் பேச்சு வரிசையில் நாம் தற்போது. சங்க காலத்தில் நிற்கிறோம். சங்க காலம் என்பது திட்ட மாக வரையறுக்க இயலாவிடினும் பெரும்பாலரான அறிஞர்கள், கிருத்து பிறப்பதற்குப் பின்னும் முன்னுமாக ஒரு சில நூற்றாண்டுகளை அக்கால எல்லையுள் நிறுத்துவர். தமிழ் நாட்டில் மூன்று சங்கங்கள் இருந்தன என அறிகி றோம். அவற்றுள் முதற்சங்கம் தென் மதுரையிலும், இடைச்சங்கம் கபாடபுரத்திலும் இருந்தனவாம. அந்த இரு இடங்களும் கடலால் கொள்ளப்பட்டன. கடைச் சங்கமே தற்காலத் திய மதுரையில் இருந்தது எனக் கொள் வர், நாம் இப்போது சங்க காலம் எனக் கொள்வது அக் கடைச்சங்க காலத்தையே யாகும். அது இன்றைக்கு. ஆயிரத்து எண்ணுறு ஆண்டுகளுக்கு முன், ஏறக்குறைய நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டுகளில் புலவர்கள் பரவி விரவித் தமிழ் வளர்த்த ஒரு காலத்தையே குறிப்பதாகும். எனவே, நாம் சங்க காலம் எனக் கொள்வது இன்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஒன்றாகும். அத்துடன் சங்கம் மருவிய காலம் எனப்பெறும் சிலப்பதிகாரம் மணி' யோமை போன்ற காப்பியங்கள் தோன்றிய காலத்தையும் இதன் எல்லேயிலே தான் கொள்ளல் வேண்டும்.

  • Mசவத்தாந்த சமாக ஆண்டு விழாவில் (25-12-50) சமய சொற்பொழிவு,