பக்கம்:கொய்த மலர்கள், மூன்றாம்பதிப்பு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கொய்த மலர்கள் எனட்படும். அச்சிவசம்பந்தமுடையதே சைவநெறி. இது பற்றி விளக்கிப் பேசின் வாழ்வின் எல்லை போதாது. எனவே, ' நாடெங்கும் நலம்பெற்று வாழ வழி காட்டுவதே சிவநெறி என்ற சைவம்' என்னும் அளவோடு அமை கின்றேன். சத்தியும் சிவனும் இச்சிவநெறி பற்றிய விளக்கங்கள் பல. இந்நெறிக்கு முதல்வன் சிவன். அவனைப் பிரியா திருப்பவள் சத்தி. சத்தியும் சிவமும் கலந்து அன்று முதல் ஆற்றும் அலகிலா விளையாடல்களைப் பாடு வனவே சைவ சமய நூல்கள் அனைத்தும். அணுவுக்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய் இருக்கும் ஆண்டவனை வழிபட்ட அடியவர்கள், அவனைப் பலப்பல வகைகளில் பலப்பல தோற்றங்களில் கண்டு வழி பட்டார்கள். அதனாலேயே உலகில் பல்வேறு சமயங்களும் சைவ சமயத்துக்குள்ளேயே பல்வேறு வழிபடு முறைகளும், பல்வேறு கடவுளர் அமைப்புக்களும் தோன்றலாயின், மணிவாசகர். • தென்னா டுடைய சிவனே போற்றி எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி' என்று இதனாலேயே கடவுள் தன்மையை எடுத்துக் காட்டினார். கடவுள் ஒருவனே இச் சிவன் உருவமாகவும் அருவமாகவும் அருவுருவ மாகவும் இருந்து ஐந்தொழில் புரிந்து உயிர்களின் வாழ்வை வளம்பெறச் செய்யும் நிலையில் பலப்பல வேடங் களில் விளையாடி வினையாற்றுகின்றான். அவ்வப்போது அவனுடைய தோற்றத்தில் எத்தனையோ மாறுதல்கள் காணுகின் றனர் அவன் அடியவர் கள். அவ்வவற்ரைப்பற்றி அவனுக்குப் புதுப்புது பெயர்கள் சூட்டுகின்றனர். நீல