பக்கம்:கொய்த மலர்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 கொய்த மலர்கள் ஆராய்ச்சியாளர் அனைவரும் ஒப்புக்கொள்ளுகின்றனர். அந்த நாகரிகத்தில் வாழ்ந்த சிந்துவெளித் திராவிட மக்கள் மெல்லிய பஞ்சாலாகிய ஆடைகளை உடுத்தி யிருந்தார்கள் எனக் காண்கிருேம். பின்னல் வடமேற்கு வாயில் வழியாக வந்த ஆரியர்கள் இவர்தம் ஆடை களைக் கண்டு வியந்து தம்முடைய இருக்கு வேதத்தில் இவற்றைப் புகழ்ந்து பாராட்டியுள்ளார்கள் எனவும் அறிகிருேம். எனவே, பிற நாடுகளெல்லாம் அறியாத நெடுநாட்களுக்கு முன்பே இங்காட்டுப் பழம்பெரும் மக்கள் பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் ஆடைகள் நெய்து அழகுக்காகவும் பண்பாட்டுக்காகவும் உடுத்தி மகிழ்ந்தார்கள் எனக் காண்கிருேம். பழங்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் இந்த ஆடை நெய்யும் பழக்கம் இருந்திருக்க வேண்டும். அவரவர் வாழ்வுக்குத் தேவையான பொருள்களே ஒவ்வொருவரும் பயிரிட்டும் உண்டாக்கியும் வைத்துக்கொண்ட வாழ்க்கை நெறி இங்காட்டுப் பழங்கால மக்களுடையது. பிற்காலத்து ஆரியர் நுழைவுக்குப் பிறகேதான் சமுதாய நலத்திற் கேற்பத் தொழிற்பாகுபாடுகளே உண்டாக்கி அவற்றின் வழி வருணங்களைப் பிரித்தார்கள் என்று வரலாறு கூறு கின்றது. இந்தியாவில் அவர்கள் கால் வைத்தபோது வருணப் பிளவுகள் கிடையா; பின்னரே உண்டாயின. சிற்சில தொழில்கள் தனிப்பட்டவரால் செய்யப்பட்டும் வந்திருக்கலாம். அதையேதான் திருவள்ளுவர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் எனக் காட்டிச் சென்ருர். நிற்க, பழங்காலத்தில் குடும்பத்துக்கு வேண்டிய பொருள்களைப் பெரும்பாலும் அவர்களே தேடிக் கொண்டார்கள் எனக் கண்டோம். அந்த முறையில் ஆண்களும் பெண்களும் பொறுப்புக்களைப் பங்கிட்டுக் கொண்டார்கள். ஆடைக்கு வேண்டிய நூலைத் தயார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/10&oldid=812300" இலிருந்து மீள்விக்கப்பட்டது