பக்கம்:கொய்த மலர்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கைத்தறி ஆடைகள் 9' செய்யும் பொறுப்பு பெண்களுடையதாகவே இருந்தது. பஞ்சைத் துப்புரவு செய்து முறைப்படி அதை நூலாக்கி வந்தவர்கள் பெண்கள்தாம். ஆம்! நூலிழையைச் செய்த வர்கள் வாலிழையர்கள் தாம். பருத்திப் பெண்டிர்' என்றே சில பெண்கள் குறிக்கப் பெறுகிரு.ர்கள். இதைக் குறிக்க இலக்கணப் புலவர் பவணந்தியார் நல்ல ஒரு வெண்பாவையே பாடி இருக்கிரு.ர். அவர் காட்ட வந்தது புலவன் பாடும் நூல். அந்த நூலையும் இந்த மகளிர் இழைக்கும் நூலையும் ஒப்புமைப்படுத்திப் பாடுகிருர் புலவர். பாட்டு உருப்பெற்று விடுகிறது. "பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா-எஞ்சாத கையே வாயாக கதிரே மதியாக மையிலா நூன்முடியு மாறு' என்ற வெண்பாவில் குற்றமற்ற நூல் முடிக்கும் திறத்தை நன்கு காட்டுகிருர் பவணந்தியார். பெண் கையில் கதிர் கொண்டு பஞ்சினை நூலாக்குகிரு.ர். புலவர் சொல்லைக் கொண்டு மதிகாட்டி வாய்வழி நூலைச் செய்கிருர். இந்தத் திறத்தால் காம் அறிவது அக்காலப் பெண்கள் நூல் நூற்பதில் வல்லவர் களாக இருந்தார்கள் என்பதே. பெண்கள் சக்கரம் சுற்றி (சர்க்கா) நூல் இழைத்தார்கள் என்ற குறிப்பும் கிடைக் கின்றது. அவர்கள் மிக மெல்லிய இழைகளாகவும் நூல்களை நூற்ருர்கள் போலும். இன்றைய கணக் கின்படி 130 எண் நூல்களைக் கூட அவர்கள் நூற்ருர்கள் என்பர். அந்த எண் நமக்குத் திட்டமாகத் தெரியா விட்டாலும், பாலாவி அன்ன மேலாடை நெய்தனர். என்ற உண்மையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்கள் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன. சங்க இலக்கியங்கள் அக்கால நல்ல ஆடைகளைப் பற்றிச் சிறப்பாகப் பாராட்டுகின்றன. பாலாவி கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இருப்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/11&oldid=812322" இலிருந்து மீள்விக்கப்பட்டது