பக்கம்:கொய்த மலர்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f கைத்தறி ஆடைகள் 7 களேயேயாம். அந்த நாடுகளில் ஆட்டு மயிர்களால் ஆடை கெய்வது வழக்கம். இங்கோ மக்கள் பருத்தியைப் பயிரிட்டு, பஞ்சிலிருந்து நூலெடுத்து ஆடை நெய்த திறன் அவரை வியப்புக்குள் ஆழ்த்தியிருக்கும். ஆடை பருத்தியாலும், பட்டாலும், மயிரினலும் நெய்யப்படு வதை இன்றும் காண்கிருேம். நாகரிகம் மிக்க இந்த நூற்ருண்டின் இடைக்காலத்தில் பல்வேறு பொருள் களிலிருந்தும் ஆடை நெய்யப்படுவதையும், அவை களெல்லாம் இந்த முப்பொருளால் நெய்யப்படும் ஆடை களுக்கு நிகராக வாழவில்லை என்பதையும் காண்கிருேம். எனவே இந்த முப்பொருளும் பஞ்சு-மயிர்-பட்டு என்ற மூன்றும் ஆடைகள் ஆக்கச் சிறந்த மூலப்பொருள்கள் என்பது கண்கூடு. தமிழ் நாட்டில் இந்த மூன்று பொருள்களாலும் மிகப் பழங்காலத்திலிருந்தே ஆடை நெய்து உடுத்து வந்தார் கள் என்பதைச் சங்ககால இலக்கியங்கள் கன்ருக எடுத்துக் காட்டுகின்றன. 'பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் கட்டு நுண்வினைக் காருகர் இருக்கை'கள் நகர்தொறும் இருந்ததாக இலக்கிக் காட்டுகின்றன. எனவே கடைச் சங்க காலத்துக்கு முன்பே-இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே-தமிழ் மக்கள் நாகரிகமுடையவர் களாக கல்லுடை உடுக்கப் பழகி இருந்தார்கள் என்பது தெளிவு. இன்றைய வரலாற்றுப் பேராசிரியர்கள் இந்திய காட்டு வரலாற்று எல்லையைச் சிந்துவெளி நாகரிகத்தி லிருந்து தொடங்குகிருர்கள். அந்த நாகரிகம் இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றும், அக் காலத்தில் ஆரியர், இந்தியாவுக்குள் வரவில்லை என்றும், சிந்துவெளி உட்பட இந்தியா முழுவதும் பரவி இருந்த காகரிகம் திராவிட நாகரிகமே என்றும் நேர்மையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/9&oldid=812597" இலிருந்து மீள்விக்கப்பட்டது