பக்கம்:கொய்த மலர்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ஒரு சொல் கேளிர் உலகம் உய்யத் தோன்றிய கவிஞர்கள் எத்தனையோ வகையில் பாட்டிசைத்துச் சென்றுள்ளார்கள். நாடு வாழ வும், நாநிலம் வாழவும், மக்கட் சமுதாயம் தழைக்கவும் அவர்கள் காட்டிய வழிகள் பலப்பல. அவற்றையெல்லாம் எண்ணி, அவற்றின் வழி நடப்பின் உலகில் துன்பமே காண முடியாது. ஆனல் கடந்தால்தானே! பாரதி உலக மக்களை நோக்கியும், பரந்த பாரத நாட்டு மக்களை நோக்கியும், தமிழ் மக்களை நோக்கியும் பலப்பல அறிவுரைகளை அள்ளி வீசுகிருன். அவன் நாட்டுப் பாடல்களைப் போற்றி நாடு விடுதலை கண்டது. எனினும் அவன் விரும்பிய பொருளாதார விடுதலை, சமூக விடுதலை போன்றவை இன்னும் கனவாகவே உள்ளன. கனவை நனவாக்க வேண்டுவது நன்மக்கள் கடன். பாரதி, தமிழ்ச் சமுதாயத்தை-தமிழ்ச் சாதியை நோக்கியும் சில வேண்டுகோள் விடுக்கின்ருன். சாதி மதங்களைப் பாரோம் என முழக்கிய பாரதிதான் தமிழ் மக்களைச் தமிழ்ச்சாதி எனக் காட்டுகின்ருன். அந்தச் சாதிப் பகுப்பால் ஒற்றுமையே விளையும் என்பதை அவன் உணர்வான். தமிழ் வளர, தமிழன் வாழ, தமிழ் நாடு தழைக்கப் பாடுபடும் - எண்ணும் . எழுதும் . அத்தனை பேரையும் அவர்வழி வாழும் தமிழ்ச் சமுதா யத்தையும். 'தமிழ்ச் சாதி யாக்குகிருன். அத் தமிழ் மக்களே நோக்கிப் பலப்பல அறிவுரைகள் சொல்லு கிருன். அவை அனைத்தும் தமிழர் செவியில் ஏறி யிருக்குமா? எப்படி இருக்கும்? இருந்தால், வள்ளுவர்

  • பம்பாய் கலைவிழா மலர்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/104&oldid=812310" இலிருந்து மீள்விக்கப்பட்டது