பக்கம்:கொய்த மலர்கள்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

“114 கொய்த மலர்கள் நீங்கின் தெறுஉம் குறுகுங்கால் தண்என்னும் தீயாண்டுப் பெற்ருள் இவள் (1104) என்றும், நன்கு தலைவியால் பெறும் இன்பத்தையும், பிரிந்தால் உறும் துன்பத்தையும் உவமைகள் வாயிலாக விளக்கு கின்ருர். இவைபோன்றே தலைவன் அருமையைத் தலைவி பாராட்டுவதும் அறிந்து இன்புறத்தக்கது. ஒருவரைiஒருவர் கண்ட பிறகு இருவரும் மாறி மாறி ஒவ்வொருவர் உள் ளத்தும் இடம் பெற்று விட்டனர். எனவே அவர்கள் உள் ளம் காதலர் வாழும் உள்ளமாகிவிட்டது. இந்த உள்ளத் தில் வெம்மை படலாமா? வெப்பம் காதலருக்குத் துன்பம் உண்டாக்கு மல்லவா! எனவே காதலி தான் வெம்மையான பொருள்களை உண்ணமாட்டாமையைக் குறித்து விளக்குகிருள். தான் வெம்மையான பொருக்ள உண்டால், அதனல் உள்ளத்து கிலத்து வாழும் காத லருக்கு ஏதம் வரும் என அஞ்சும் நிலை காதலியின் உயரிய பண்பாட்டை எண்ணத் தூண்டுகிற தன்ருே நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக்(கு) அறிந்து (1188) என்று வள்ளுவர் அத்தலைவியின் கருத்தை அழகுபட எடுத்துக் காட்டுகின்ருர், இதே நிலையில் தம் கணவரைப் பிரிந்த தலைவியர் (நிலையை வள்ளுவர் நன்கு விளக்கி, அவர்கள் எங்கே பிரிந்திருந்தாலும் இடையருது கினைக்கின்ற நிலையிலே வாழ்கின்றவர் என்பதையும் காட்டுகின்ருர். இரவுப் பொழுதில் கணவனே எண்ணி எண்ணி ஏங்கும் பெண்கள் தாம் உறங்காது வாடும் நிலையையும், உலகெலாம் உறங்கும் நிலையையும், அதுகால இரவே தமக்குத் துணை யாகும் பான்மையையும், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/116&oldid=812335" இலிருந்து மீள்விக்கப்பட்டது