பக்கம்:கொய்த மலர்கள்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் காட்டிய காதல் நெறி 115 மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்துஇரா என்அல்லது இல்லை துணை' (1168) என்று எடுத்துக் காட்டுகின்ருர். தலைவி தலைவனைப் பிரிந்தாலும் அன்றிக் கூடினலும் உறங்காமலேயே உள்ளாள் என்பதை மற்ருெரு குறளால் வள்ளுவர் காட்டுகின்ருர். தலைவன் வரவில்லையானல் 'வரவில்லையே' என்று எண்ணி எண்ணி ஏங்கும் நிலையில் உறக்கம் வரவில்லை. வந்த பிறகோ அவனைக் கண்டு கண்டு காதற் கதைகள் பேசிப் பேசி உறக்கத்தை ஒட்டுகிருள். எனவே என்றும் உண்மைக் காதலி உறங்காள் என்ற பண்பை, ' வராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண்' (1179) எனக்காட்டுகின்ருர் . காதல், உள்ளத்து எப்போதும் நீங்கா கிலேயில் கிலைத்து கிற்கும் ஒன்று என்ருலும், அது இரவில் ஆட்சி புரிவது என்பதை யாவரும் அறிவர். இந்த உண்மையை "வள்ளுவர் பல குறட்பாக்களால் விளக்குகின்ருர். ஒன்று சிறந்ததாக நாம் காட்டுவோம். காதல் நோய் மாலை மலரு வது. மாலை மலர்ந்து இரவெல்லாம் மணம் வீசி உரியவர் களே மகிழவைப்பது. அம் மலர் காலேயில் அரும்புவிட்டு, பகலில் போதாக இருந்து, மாலையில் மலருவதாகும். இதல்ை மாலைக் காலத்தோ இரவுக் காலத்தோ வருந்தி மற்ற வேளைகளில் தலைவரை மறப்பவர் அல்லர் பெண்கள். காதல் இன்பம் உள்ளத்தே ஊடுருவி நிற்பது. மாலை இரவு போன்ற இனிய காதல் நலம் தரும் வேளைகளில் புறத்தே .ெ த ரி ய க் கூ டி ய து. இ ங் த உண்மைகளையெல்லாம் உள்ளடக்கி, - கால அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந் நோய்' (1487) என்கிருர் வள்ளுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/117&oldid=812337" இலிருந்து மீள்விக்கப்பட்டது