பக்கம்:கொய்த மலர்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 கொய்த மலர்கள் இவ்வாறு இரவில் ஆட்சி புரியும் காமநோய் கூடி இருக்கும் தலைவரை ஒன்றும் செய்யாது. அவர்தம் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லையே! என்ருலும் பிரிந்து நிற்ப வரைப் பல வழிகளில் இரவு அல்லல் படுத்தும். பிரிந்த தலைவரை எண்ணி எண்ணி வாடும் மங்கையர் உறங்க மாட்டார்கள் எனக் கண்டோமல்லவா ஒரு வேளை உறக்கம் வருமானல், அதிலும் தம் காதல்நோய் பற்றியே கனவு காண்பார்கள். விழித்தால் அக்கனவு நீங்கிவிடு மல்லவா! எனவே தலைவனைக் காணுது கனவில் கவலு. வார்கள். ஆகவே சில பெண்கள் கனவையே விரும்பு வதும் உண்டு. கனவிலே தம் தோள்மேல் துஞ்சும் காதலர் கனவில் நெஞ்சத்தே ஆட்சி புரிவாரல்லவா!' இதையும் எண்ணிப் பார்க்கிருள் ஒரு பெண். இங்கே காணும் இரு குறள்களும் கனவின் சிறப்பையும் அதன் ஏற்றத்தையும் காட்டுகின்றன. கனவுஎன ஒன்றுஇல்லை யாயின் கனவிஞன் காதலர் நீங்கலர் மன்' (1216) துஞ்சுங்கால் தோள் மேலராகி விழிக்குங்கால் நெஞ்சத்த ராவர் விரைந்து (1216) இக் குறள் பாக்களிெைலல்லாம் அறிவன யாவை? காதல் அல்லது காமத்தால் பின்னப்பட்டார் இருவர் எக் காரணத்தாலும் எக்காலத்திலும் எத்தனை பிறவி எடுத் தாலும் பிரியாது, உள்ளத்தால் உடன் உறைந்து மற வாது வாழ்க்கை கடத்தும் மாண்பினர் என்பதும், அவர் வழியே கற்பு கலம் நாட்டில் சிறந்து கிற்கின்றது என்பதும் தேற்ற மன்ருே! - இனி, இவ்வாறு உள்ளத்தால் ஒன்றிய காதலர் தம் முன் சிறு சிறு வேறுபாடுகள் காரணமாக மாறுபாடு கொண்டுப் பிணங்கி ஊடுவது உண்டு என்பதும், அவ் ஆடலே பின் அவர்தம் கூடலுக்குக் காரணமாக கின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/118&oldid=812339" இலிருந்து மீள்விக்கப்பட்டது