பக்கம்:கொய்த மலர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடையும் தையற்கலையும் 33 ஆடவரும் பெண்டிரும் இன்று அழகாகப் பலப்பல வகையில் உடைகளே ஆக்கிக் கொள்ளுகின்றனர். தையற் கலை நல்ல வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது. அரச காரியங்களில் தொழிற்படும் காவல் துறையாளர் போன்ற அலுவலர்களுக்கு அரசாங்கமே பலவகைகளில் ஆடைகள் செய்து தருகின்றது. ஆளும் தலைவர் ஒருவரை அறிய வேண்டுமாயின் அவருடன் வரும் சேவகனக் கண்டே அறிந்து கொள்ள முடியும். சிலநாட்களுக்கு முன் ஆங்கிலேயர் ஆட்சியில் அத்தகைய சேவகர்'களுக்கு ஒரு பேருடையே வழங்கிக் காண்பார் மருளும் வகையில் அவர் தம் தோற்றம் அமைந்திருந்ததை அறிவோம். இந்த கிலே அன்றும் இருந்தது. யவன மக்கள் அன்று பெரும்பாலும் அரசர்தம் அணுக்கக் காவலர்களாக இருந்தனர். அவர்தம் ஆடையை விளக்கிக் காட்டுகின்ருர் ஆசிரியர் கப்பூதனர். முல்லைப் பாட்டில் அத்தகைய யவனக் காவலர் காட்சி தருகின்றனர். அவர்தம் தோற்றத்தை, " மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை மெய்ப்பை புக்க வெருவரு தோற்றத்து வலிபுணர் யாக்கை வன்கண் யவனர் (முல்லை. 59.61). என அவர் நன்கு எடுத்துக் காட்டுகின்ருர். இதனல் அக்காவலர் நல்லதொரு மேல் உடை (Shirt-சொக்காய்) அணிந்திருந்தார்கள் என்பது தெரிகின்றது. அதை •மெய்ப்பை என்கிருர் அவர், உடலை உள்ளே மூடி வைப் பதேைல அது மெய்ப்பையாக அமைந்த சிறப்பே, நமக்கு அக்காலத்திருந்த தையற்கலைத் திறனை நன்கு காட்டு கிறது. . இந்த முல்லைப்பாட்டு அடியில் வரும் மத்திகை என்ப தற்குக் குதிரைச் சமட்டி எனப் பொருள் குறிக்கிறது. பல்கலைக் கழக அகராதி. பாசறையில் இருப்பதால் அக்காவலர் குதிரைச் சமட்டியை வைத்திருந்தார்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/35&oldid=812476" இலிருந்து மீள்விக்கப்பட்டது