பக்கம்:கொய்த மலர்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 கொய்த மலர்கள் என்பது பொருந்தும் என்ருலும், அதை இடுப்பில் செருகி வைத்திருப்பார்கள் எனக் கொள்வது பொருந்தாது. அன்றி இக்காலத்துக் குதிரை வண்டி ஒட்டுபவர்களைப் போலச் செருகி வைத்துக் கொண்டிருந்தார்கள் என்று கொள்ளினும் கொள்ளலாம். அக் காவலன் மெய்ப்பை யிட்டு அதன் மேல் செறிந்த சுற்று அல்லது கட்டிட்டிருக்க, அதில் இம்மத்திகை செருகப்பட்டிருக்கிறது என்பது பொருள். இப்பொருள் ஒருவாறு கொள்ளத்தக்கது தான் என்ருலும், அதனினும் சிறந்த பொருள் கொள்ள வும் இவ்வடி இடம் தருகின்றது. மத்திகை என்பதற்குப் பூமாலே என்ற பொருளும் உண்டு. பூமாலை போன்ற அழகிய வேலைப்பாடு அமைந்த வளைவு எனக் கொள்ளல் பொருந்தும். இன்றும் பூவேலை கள் (Embroidery) சிறக்க ஆடைகள் செய்யப்படுவதைக் காண்கிருேம். அதனினும் கான் முன்குறித்த அரசாங்கக் காவல்காரர்களின் கச்சையும் பட்டையும் அழகிய வகை யில் அமைந்திருந்தனவன்ருே என்வே அன்றைய மன்னர்தம் காவலர் மெய்ப்பையாகிய சொக்காய் (Shirt) அணிந்திருந்தார்கள். அவர் இடையில் பூவேலை செய்த கச்சு யாக்கப்பெற்றிருந்தது எனக் கொள்ளல் பொருந்தும். இனி அந்த மெய்ப்பை எவ்வாறு இருந்தது என்பதை கம்மால் கூற முடியாவிட்டாலும், அதன் அமைப்பு உடலை கன்கு மூடிக் கிடந்தது என்பதும், அதன் இடையில் அழகிய பூ வேலைப்பாடு அமைந்த கச்சு (Belt) இருந்தது என்பதும் தெரிகிறது. இவ்வாறே ஆடவரும் மகளிரும் பலப்பல வகையான உடைகளை அணிந்திருந்தனர். பெண்களின் உடைகளையும் அவர்தம் அழகுபடுத்தும் முறைகளையும் பழங்கால இலக்கியங்கள் மிக அழகாகக் காட்டுகின்றன. ஆகவே, அக்காலத்தில் தையல் பொறிகள் எவ்வாறு இருந் தன என்பது நம்மால் அறியக் கூடாததாயினும், அழகிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/36&oldid=812478" இலிருந்து மீள்விக்கப்பட்டது