பக்கம்:கொய்த மலர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலச் சைவம் 39 கண்டன், ஆலமர்செல்வன், பிறைகுடி, நீறணிந்தோன், மழுவேந்தி, பிஞ்ஞகன், பரசுபாணி, முருகன், வேலன் என்ற பல பெயர்கள் அவ் விறைவன் தோற்ற கிலே களுக்கு ஒப்ப அமைகின்றன. எனினும், ஆண்டவன் ஒருவனே, .ށޯ ஒருநாமம் ஒருருவம் ஒன்று மிலார்க்கு ஆயிரம் திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ' என்று மாணிக்கவாசகர் உளமுருகிப் பாடுவது இது பற்றியே யாகும். கால எல்லை இச் சிவன் அல்லது இறைவன் என்று தோன்றினன்' என்று சொல்ல முடியாது. அவன் காலமும் கணக்கும் நீத்த காரணன்; கால காலன்; அவனைக் காலஎல்லையில் கட்டுப்படுத்தமுடியாது. எனினும், நம் சமாசம் அவன் வாழ்வைக் கால எல்லைக்குள் கட்டுப்படுத்த விரும்பு கிறது. தான் காலம் கடந்தவனயினும், வேண்டுவார் வேண்டுவதே ஈதல் அவன் தொழிலாதலின், அவனும் அதற்குக் கட்டுப்பட்டு விட்டான். ஆம் நான் அவனைச் சங்ககால எல்லையில் கட்டுப்படுத்தி, அக்காலத்தில் அவன் எவ்வெவ்வாறு தமிழ் நாட்டில் களிகடம் புரிக் தான் என்பதைக் காட்டல் வேண்டும். சங்ககாலத்தில் சைவம் வாழ்ந்த வகையைக் காட்டுவதே என் பணி, அறுதியிட்ட கால எல்லே ஆண்டவனுக்கு இன்றேனும் நமக்கு உண்டு. எனவே, என் கால எல்லேயில் கின்று உற்ற பணியினைத் தொடர்கின்றேன். சங்க காலச் சமயங்கள் - சங்க காலத்திலே சைவமே தமிழ் நாட்டில் தலை சிறந்த சமயமாக இருந்தது. அதை அடுத்து வைணவமும் சிறந்திருந்தது. பெளத்தமும் சமணமும் தமிழ் நாட்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/41&oldid=812490" இலிருந்து மீள்விக்கப்பட்டது