பக்கம்:கொய்த மலர்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கொய்த மலர்கள் இதன் வழி அக்காலத் தெய்வ வழிபாட்டு முறையும் நன்கு விளங்குகின்றது. மற்றும் பெண்கள் தம் கண வரைப் போற்றும் முறையும் தெரிகிறது. மேலே குறுங் தொகை 87இல் தலைவி தலைவனுக்குத் தொல்லை வரா திருக்கத் தெய்வத்தைப் பரவுவதாகக் கண்டோமாயினும்: சங்ககாலப் பெண்கள் தங்கள் நாயகரில் தெய்வம் தவப் பிறிது இலை என்று எண்ணியே வாழ்ந்தார்கள் என்பது தெளிவு. காடுறை சிறு தெய்வம் ஒருவேளை சீற்றத் தால் தம் கணவருக்குத் தீங்கிழைக்குமோ எனக் கருதிய தலைவி, தன்னிலையை அத் தெய்வத்திற்கு உணர்த்திய தாகக் கபிலர் காட்டுகின்ருரே ஒழிய, அத்தெய்வத்தை வணங்கியதாகக் கூறவில்லை. சங்க காலத்திலே சிவனும் பிற கடவுளரும் சிறந்த தெய்வங்களாகப் போற்றப் பெற்ருலும் கூட, அக் காலப் பெண்கள் அக் கடவுளரை வணங்கியதாகக் காண முடியாது. தெய்வம் தொழாஅள் கொழுநற் ருெழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை என்ற வள்ளுவர் வாய்மொழிப்படியே தமது வாழ்வை, அமைத்துக் கொண்டனர். இச் சிறந்த கற்பொழுக்க நெறியை சங்ககாலத்தை ஒட்டிவந்த இரு பெருங் காப்பியங். களும் நன்கு காட்டுகின்றன. கணவன் தன்னேவிட்டுப் பிரிந்த கண்ணகிக்கு, அவள் தோழி தேவந்தி, கணவனே அடையப் புகாரில் உள்ள காமவேள் கோட்டம் தொழ வேண்டும் எனவும், பல தீர்த்தங்களில் மூழ்க வேண்டும் எனவும், காட்டுகின்ருள். ஆனல் கற்பிற் சிறந்த கண்ணகி தன் கணவனைத் தவிரப் பிற தெய்வங்களை வழிபடாக் கடப்பாட்டில் கின்றவளாத லின்-கணவன் தன்னை கைவிட்ட போதிலும், அவனே தன் தெய்வம் எனக் கொண்டவளாதலின்-தேவந்தி சொல்லிய அத்தனே வழிபாடுகளையும் பீடன்று என்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/58&oldid=812526" இலிருந்து மீள்விக்கப்பட்டது