பக்கம்:கொய்த மலர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலச் சைவம் 57 ஒரே சொல்லால் ஒதுக்கிச் சிறந்தாள். அதேைலயே அவள் பல கடவுளர் போற்றும் கற்புடைத் தெய்வமாகப் போற்றப்பட்டாள். மணிமேகலையில் தன் கணவனுக்கு உற்றதைக் கேட்ட கற்புக் கடம் பூண்ட ஆதிரை நல்லாள் பிற தெய்வங்களே வணங்காது தீப்பாயவே துணிந்தாள். அவள் கற்புநிலை கணவன் இறவாமையின்.அவளேக் காத்தது. மற்றும் சாத்தனர். " தெய்வம் தொழாஅள் கொழுநற் ருெழு தெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்ற அப் பொய்யில் புலவன் பொருள்உரை தேருய்" x (மணி. 22, 59 61) என்று பத்தினிப் பெண்டிர் பிற தெய்வங்களைத் தொழு வார்களாயின் தம் நிலையில் தாழ்வார் என்பதைப் பார்ப்பனப் பெண் மருதியின் கதை வாயிலாக நன்கு விளக்குகிருர். எனவே, சங்க காலத்தில் சைவ மங்கைய ராயினும் பிறராயினும் கணவனை அன்றிப் பிற தெய்வங் களை வணங்கிய வகையினைக் காட்ட இயலாது. காப்பியங்களில் முதலிடம் கிற்க, இந்த இருபெருங் காப்பியங்கள் உண்டான காலத்தில் நாட்டில் சமணமும் பெளத்தமும் கால் கொள்ளத் தொடங்கி வளரவும் பெற்றன என்ருலும், சைவ சமயமே மேலோங்கி இருந்த தென்பதும், சிவனே அனைவருக்கும் முதற் கடவுளாகப் போற்றப் பட்டனன் என்பதும் நன்கு விளங்கும். சமண சமய இளங்கோ வடிகள் புகாரில் உள்ள கோயில்களை வரிசைப் படுத்திக் காட்டும்போது, சிவனை முதலிலும் அறுமுகனே அடுத்தும் வைத்துப் பிற தெய்வங்களைப் பின் வைத்துப் பேசுகிருர், அவர் சிவனைப் பிறவா யாக்கைப் பெரியோன் என்கிருர், அவர் கருவிலிருந்து பிறவாத காரணத்தால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/59&oldid=812528" இலிருந்து மீள்விக்கப்பட்டது