பக்கம்:கொய்த மலர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 கொய்த மலர்கள் காணுது ஒத்து நோக்க வேண்டுவது மனிதப் பண் பாகும். விலங்கு முதலிய அறிவு குறைந்த உயிரினங் களுக்கெல்லாம் ஒருவேளை இந்த ஒற்றுமை தெரியா திருக்கலாம். ஆனல், எல்லாம் அறிந்தவகைத் தன்னை எண்ணிக் கொள்ளும்-பகுத்தறிவு பெற்றுப் பாரினே ஆளப் பிறந்தவகைத் தன்னை மதித்துக்கொள்ளும்மனிதனுக்கு இந்த உயிர் ஒற்றுமை கட்டாயம் தெரிக் திருக்கவேண்டும். ஆம் இந்த உண்மையைத்தான் பொய்யில் புலவர் திருவள்ளுவனர், "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா செய்தொழில் வேற்றுமை யான்" என்று விளக்கிப் போந்தார். இந்த ஒற்றுமையின் நல்ல அடிப்படையில்தான் உலகில் சமரச ஞானம் முகிழ்க்கும். உண்மைச் சமரச ஞானமே உலகை என்றென்றும் வாழவைககும் என்ற உண்மையை உணர்ந்தவர்களே. மனிதர்கள் l மற்றல்லாதார் யாரோ? இன்றைய மனிதன் இந்த உண்மையிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்று விட்டான். பறவையையும். செடியையும், பாம்பையும், கொடியையும் ஒத்து நோக்கி உயிரினத்தினைப் பிணைத்துப் பாராட்ட வேண்டிய "ஆறறிவு பெற்ற மனிதன், மனித இனத்துக்குள்ளேயே வேறுபாடு கற்பித்துக் கொண்டு, மாறுபட்ட நெறியில் செல்லத்தொடங்கி நெடுநாள் கழிந்து விட்டது. முல் இலக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும் கொடுத்து உயிரினத்தை ஒற்றுமைப்படுத்திய தமிழ்ச் சமுதாயத்தே இன்று எத்தனை வேறுபாடுகள் தலைவிரித்தாடக் காண் கின்ருேம். முல்லையையும் மயிலையும் மறந்த மனிதன் தன் இனத்தவனேயே மறந்துவிட்டான். மனித இனத்துக்குள் ளேயே கணக்கற்ற வேறுபாடுகளைக் கற்பித்துக் கொண் டான். அவன் சாதியாலும், சமயத்தாலும், திேயாலும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/76&oldid=812568" இலிருந்து மீள்விக்கப்பட்டது