பக்கம்:கொய்த மலர்கள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 கொய்த மலர்கள் கின்றனர். உலகம் தோன்றிய அந்தகாள் தொட்டு இன்று வரை அவர்கள் காட்டிய-காட்டும்.சமரச நெறியை மனிதன் வாழ்விடை இன்னும் கொள்ளவில்லை. என்ரு லும் அந்த அருள்ஞானச் செல்வர்கள் அதனல் சலிப்படை யாது அடுத்தடுத்து வந்து நமக்குச் சமரச ஞானத்தைத் தந்துகொண்டே யிருக்கின்றனர். அத்தகைய உள்ளத் துறவு பெற்ற உயர் அடியார் வரிசையில் வந்து உலகெல் லாம் வாழ வேண்டும் என்ற நல்ல விழைவில் அருட்பா பாடி, உயிர் நலம் புரந்த செம்மலார் இராமலிங்க அடிகளார் ஆவார்கள். அவர்தம் ஒவ்வொரு சொல்லும் உயிரினத்தை வாழ வைப்பதாகும், அவர்கள், தாம் அனுபவ வாயிலாகக் கண்ட பல உண்மைகளே உலகுக்கு உணர்த்துகின்ருர்கள். அவரைக் காட்டினும் உயிர்களைக் கண்டு வருந்தி - அவர்தம் வருத்தம் கண்டு வாடி, அவர் நோய் கண்டு நெஞ்சு கைந்து, அவர்களே வாழவைக்க வழி என்ன என்னவென்று தேடிச் சென்ற பெரியவர் இல்லை என்று சொல்லாம். வாடும் பயிர் அவர் உள்ளத்தை வாட்டுகினறது. வீடு தோறும் இரந்தும் ஒரு வாய் சோறும் பெருத ஏழையின் கிலே அவர் நெஞ்சத்தைத் தொடுகின்றது. பிணியாளரின் சகிக்க முடியாத கொடுமை அவர் உள்ளத்தை வாள் கொண்டு அறுக்கிறது. அவரும் வாடுகிருர்-வருந்துகிருர். அவர்தம் இரக்கம்-ஏக்கம்-பாட்டாக உருப்பெற்று வருகின் றது. அதை இறைவன் திருமுன்பு வைத்து, 'நானே இதற்கு நாயகமே என இறைவனேக் கூவி அழைக்கிரு.ர். இதோ அவர் வாக்கு : வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியில்ை இளைத்தே வீடுதோறு இரந்தும் பசியருது அயர்ந்த வெற்றைக் கண்டுளம் பதைத்தேன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கொய்த_மலர்கள்.pdf/78&oldid=812571" இலிருந்து மீள்விக்கப்பட்டது