பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/103

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
99

தூறல் இருந்தது. அந்தத் தூறல் கொல்லிமலையின் ஒரு சாரலிலே பெய்துகொண்டிருந்த கனத்த மழையின் அறிகுறியாகும். அந்த மழையால் காட்டு வழியில் ஒடும் ஓடையொன்றிலே வெள்ளம் பெருக்கெடுத்து வேகமாக ஒடிக் கொண்டிருந்தது.

அந்த ஓடையைக் கடந்துதான் பாதை செல்லுகிறது. ஒடையின் மேலே உயரமான பாலம் எதுவும் இல்லை. தரையோடு கல் பாவித்தான் பாதை அமைத்திருந்தார்கள். இப்பொழுது வெள்ளம் அந்தக் கல்பாலத்திற்கு மேலேயே போய்க் கொண்டிருந்தது. அதனால் வெள்ளம் வடியும் வரையிலும் காரை அங்கே நிறுத்த வேண்டியிருந்தது.

இப்படிப்பட்ட காட்டு ஓடைகளிலே வெள்ளம் வந்தால் விரைவிலே வடிந்துபோகும். அதனால், அவர்கள் அங்கேயே காத்திருந்தார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் எதிர்பார்த்தபடி வெள்ளம் விரைவிலே வடியவில்லை. அடுத்த நாள் பொழுது விடிந்து ஒன்பது மணி ஆகியும் கல்பாலத்தின்மேலே சுமார் அரை அடி உயரத்திற்கு நீர் ஓடிக்கொண்டிருந்தது. அந்த அளவு நீரிலே காரைச் செலுத்த முடியுமென்று இன்ஸ்பெக்டர் கருதினார். வள்ளிநாயகிக்கும் அதுமுடியுமென்று தோன்றியது. அதனால் இன்ஸ்பெக்டர் காரை மெதுவாகச் செலுத்தினார் அடுத்த கரையை அடையப் பத்தடி தூரத்தான் இருந்தது. அதுவரையில் கார் யாதொரு விபத்துமில்லாமல் வந்துவிட்டது. ஆனால், அந்த இடத்திலே பாவியிருந்த கல்லொன்று வெள்ளத்தின் வேகத்தால் இடம் பெயர்ந்திருந்தது. வெள்ளம் ஒரே காவி நிறமாக இருந்ததால் இது கண்ணில் தென்படவில்லை. போலீஸ் இன்ஸ்பெக்டர் காரை மெதுவாகத்தான் செலுத்தினார். இருந்தாலும் காரின் முன்பக்கத்தில் உள்ள வலப்புறச் சக்கரம் அந்தக் கல் பெயர்ந்த இடத்திற்குள்ளே அழுந்தி மாட்டிக் கொண்டது. எவ்வளவு முயன்றும் காரை மேலே நகர்த்த முடியவில்லை. போலீஸாரும், இன்ஸ்பெக்டருமாகச் சேர்ந்து பலவகையாக முயற்சி செய்து பார்த்தனர். பயனொன்றும் ஏற்படவில்லை. வெள்ளம் ஓடிக்கொண்டிருந்ததால் சக்கரத்தை நன்றாகக் கவனித்து அதை மேலே தூக்குவதற்கு வேண்டி