பக்கம்:கொல்லிமலைக் குள்ளன்.pdf/104

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
100

யதைச் செய்யவும் சரியாக முடியவில்லை. சக்கரம் சேற்றில் மாட்டிக்கொண்டிருப்பதாகத்தான் அவர்களுக்குத் தோன்றிற்று.

உதவிக்கு இன்னும் சில ஆள்களை அழைத்து வருவதென்று இன்ஸ்பெக்டர் கருதினார். அதனால் அவர் ஒரு போலீஸ்காரரைப் பார்த்து, "அடுத்த கரைக்குச் சென்று, பக்கத்தில் எங்காவது ஆள்கள் இருந்தால் அழைத்து வா" என்று ஆணையிட்டார். போலீஸ்காரன் கழனிகளுக்கிடையே புகுந்து வேகமாகச் சென்றான். அந்தப் பக்கத்திலே ஊர்கள் அதிகமாயில்லை. அது பெரும்பாலும் மலைக்காட்டுப் பகுதி. போலீஸ்காரன் நெடுநேரம் சுற்றிவிட்டுக் கடைசியில் இரண்டு ஆள்களை அழைத்து வந்தான். ஒரு ஜோடி எருதும் வந்தது. வண்டியில் பாரம் போட்டுக் கட்டுவதற்கான நீண்ட வரிக்கயிறு ஒன்றையும், நுகத்தடி ஒன்றையும் அவர்கள் கொண்டுவந்தனர்.

நுகத்தடியில் எருதுகளைப் பூட்டி வரிக்கயிற்றை நுகத் தடியில் இணைத்து, காரின் முன்பகுதியில் நன்றாகக் கட்டினார்கள். வந்த ஆள்களில் ஒருவன் எருதுகளை ஒட்டினான். மற்ற ஆளும், போலீஸாரும் காரைத் தள்ளினார்கள். இன்ஸ்பெக்டர் காரைச் செலுத்தினார். அவர்களுடைய கூட்டு முயற்சியால் கார் மேலெழுந்து கரையை அடைந்துவிட்டது. ஆனால், எதிர்பாராதபடி அதிலே ஒரு பழுது ஏற்பட்டுவிட்டது. முன்சக்கரங்கள் இரண்டையும் இணைக்கும் அச்சு வலப்புறத்துச் சக்கரத்திற்குப் பக்கத்திலே வளைந்துவிட்டது.

ஆனால், நல்லவேளையாக அது முரியவில்லை. இருந்தாலும், காரை வேகமாகச் செலுத்துவதென்பது முடியாமற் போப்விட்டது. மணிக்குச் சுமார் எட்டு மைல் வேகத்தில்தான் அதைச் செலுத்த முடிந்தது. அப்படிச் செலுத்தும் போதே வலப்புறச் சக்கரம் ஆடி ஆடி வந்தது. அச்சை நேராக்க, அந்த இடத்தில் எவ்வகையிலும் முடியாது. நேர் செய்ய முயன்றால் அது ஒடிந்து போனாலும் போகலாம். அதனால் இன்ஸ்பெக்டர் தாமே எச்சரிக்கையாக ஓட்டலானார்.

இவ்வாறு எதிர்பாராத விபத்தால் அவர்கள் மாலை 3 மணிக்குத்தான் கூடல் பட்டணம் சேர முடிந்தது. இவர்கள் வருவதற்கு முன்னாலேயே தாழிவயிறனையும், மற்றொரு