100
ஆனால், நம்மைப்போலவா, எல்லோரும் பைத்தியக்காரர்களாக இருப்பார்கள். தலைவர் ஆன பிறகு, அண்ணனாவது மண்ணாவது—தோழர் அண்ணாத்துரை தான்!
போகட்டும்—புதுப் பெருமை கிடைக்கட்டும்—நாட்டம் என்ன எனக்கு? நான் கூற வந்தது, எவ்வளவு மின்சாரவேக மாறுதல் என்பதை, தம்பி! நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.
"அண்ணாவுக்கு வேண்டுமானால் இலட்சக் கணக்கான தம்பிகள் உண்டு; ஆனால், எனக்கு ஒரே ஒரு அண்ணன் உண்டு!" ஆண்டுகள் ஐந்து—அரைக் கைத்நொடிப்பொழுது—அண்ணனாது மண்ணாவது என்று கூறும் நிலை பிறந்துவிட்டது. எத்துணை வேகமான வளர்ச்சி!!
நமது கழகத்தில் இருந்து, விலகிப் புதுக் கட்சி அமைப்பது மட்டு மல்ல—புதுக்கட்சியின் வளர்ச்சி கூடப்பிறகு; முதலில் தி. மு. கழகத்தை அழிக்க வேண்டுமாம்! ஏனெனில், இவர் வெளியேறி விட்டாரல்லவா, அதனால்!
இது இவருடைய இப்போதைய எண்ணம். ஆனால் அன்று—5 ஆண்டுகளுக்கு முன்பு, மாநில மாநாட்டில் சொன்னது என்ன தெரியுமா, தம்பி!
"தி மு கழகத்தைப் பொறுத்தவரையில் நான் கூறுகிறேன்—எவருடைய இழப்பினாலேயும் தி. மு. கழகம், பெற்றிருக்கிற வளர்ச்சி, அடைந்திருக்கிற பேருரு, பாதிக்கப்படாது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒருவர் விலகுவதால் உடைந்து போய் விடக்கூடிய நிறுவனம், தி. மு. கழகம் அல்ல." ஐந்தாண்டுகளுக்கு முன்பு இருந்த கழக வளர்ச்சி கண்டே, இப்படிச் சொல்லவேண்டி நேரிட்டது என்றால், இப்பொது தி. மு. கழகம் பெற்றுள்ள நிலையைப் பார்த்திடும் எந்தப் பித்தனாவது, அது அழிந்து