99
யீட்டு விழா! 9—4—61-ல் தி. மு. கழகம் பயன் இல்லை; அதை விட்டு விலகிவிடுகிறேன், என்று அறிக்கை! இவர் தான் பத்து ஆண்டுக் கணக்கை எடுத்து வைத்துக்கொண்டு, நேருவை பிய்த்து எறிந்தவர். 9—4—61-ல், கழகத்தைவிட்டு வெளியேறினார்—19—4—61-ல் புதுக்கட்சி! அதிலே, திராவிட நாடு இல்லை! சமதர்மம் கிடையாது!? பிரிவினை கிடையாது தமிழ் நாடு, பாரதப் பிணைப்பில்!
பத்தே நாட்கள்! பத்து ஆண்டுகள், கைநொடிப் பொழுது என்றவர்தான், பத்து நாட்களுக்கும் ஒரு உவமைக் கணக்குத் தரவேண்டும்!
இவர் 'பழைய நேரு'வை அழைத்துப் புதிய நேருவுக்குப் புத்தி கூறச் சொன்னார், நாம்?
ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற, திருச்சி மாநில மாநாட்டுப் பேச்சு நான் தந்திருப்பது.
தம்பி! அப்பொழுது அவர், கழகத்தைவிட்டு வெளியேறப் போவதாக ஒரு சரடு விடப்பட்டது, அடேயப்பா! அதற்குப் பதில் அளிக்கும்போது, பேசின பேச்சு—ரீங்காரமல்லவா, அது?
"அண்ணனை நான் இழந்து விடுவேன் என்றோ, இழந்து விட வேண்டுமென்றோ, எவனாவது கருதினால், மடையனே! நீ புத்தி பெறுவதற்கு இன்னும் வெகுநாள் இல்லை என்று தான் கூற இயலும்." ஐந்து ஆண்டுகள்! கழகத்தைவிட்டு விலகி, எண்ணிப் பத்தே நாட்கள், தோழர் அண்ணாத்துரை ஆக்கப்படுகிறேன்! பெரியாரை விட்டுப் பிரிந்து ஆண்டுகள் 12 ஆகிறது—அவருடன் இருந்தபோது அழைத்தது போலவே தான் இன்றும் பெரியார் என்று மேடையில் பேசுகிறோம்; தனியாகப் பேசும்போது, எப்போதும்போல், அவர், "ஐயா!"வாகத்தான் இருக்கிறார்.