98
கிறது. ஆனால், 'தம்பி' என்று கூப்பிடவே, பயமாக இருக்கிறதே ! 8—4—61-ல் தான், முதன் முதலாக, 'அவர்' என்று அழைத்துப் பேசினேன்—ஒரு புதுக் கட்சியின் தலைவர் ஆகிவிட்டவரை மரியாதையாக அழைக்காவிட்டால், கோபம் கொப்பளிக்குமே என்று. நான் 'அவர்' என்று அழைத்ததும், அவரும் என்னைக் கௌரவப்படுத்தினார். எப்படி? அண்ணா என்று அழைத்து வந்தவர், தோழர் அண்ணாத்துரை என்று பண்பு கெடாமல் அழைக்கலானார்.
சரி! அண்ணா என்று அழைக்க நாங்கள் இருக்கிறோம் இலட்சக்கணக்கில் என்று, கூறுகிறாய். உன் உள்ளன்புக்கு என் நன்றி, தம்பி!
"திராவிட நாடு பற்றி முன்பு தவறான கருத்துக்கொண்டிருந்தேன்—அதே கருத்து இப்பொழுது இருக்கவேண்டுமா?" என்று கேட்கிறார் மாறியவர். ஆனால், அவரே தான், நேருவை நையப்புடைத்தார்—சொல்லால் அவ்வளவு அழுத்தந்திருத்தமாகப் பேசினார். முதல் அவதாரத்தில் பேசினார், எட்டாவது அவதாரத்தில் அதை மறந்துவிட்டார் என்பதற்கு, 1945-ல் பேசினார். இடையில் பத்தே ஆண்டுகள்! அரசியல் வாழ்வில் அது கைநொடிப்பொழுது! இவரே, அதற்குள் அதை மறுத்து முரண்பட்டுப் பேசுகிறார் என்றால், ஏன்? நேருவின் உள்ளம் தெளிவற்ற நெஞ்சமா ! இல்லை! தெளிவுள்ள நெஞ்சம் என்பதற்காகவே இந்தியத் துணைக்கண்டத்துத் தலைமையை அவருக்குத் தாராளமாக அளித்தது இந்திய அரசியல், பத்து ஆண்டுகளுக்கு முன்பு பேசியதற்கு முரணாகப் பண்டித நேரு பேசியதற்கு இந்தப் பலத்த தாக்குதல்! மாறிப் பேசலாம்—ஆனால் 10 ஆண்டுகள் எனும் இவ்வளவு குறுகிய காலத்திலா? என்று இடித்துக் கேட்டார்! பத்து ஆண்டுகள் ஒரு கைநொடிப்பொழுது என்கிறார்.
இவர்! தம்பி! பத்து நாட்கள் கூடப் பொறுத்துக் கொள்ளவில்லை, 7—4—61-ல் தி. மு. க. வரலாற்று வெளி-