உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கொள்கையில் குழப்பமேன்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

டியருக்கே வேண்டு'மென்ற கோரிக்கைக்கு உமது பதில் என்ன?

"முடியாது; டில்லியின் நேரடி ஆட்சியில்தான் இருக்கும்,' என்பதுதானே!

"யாரையா அதை முடிவு செய்வது? பம்பாயிலே இருக்கிற மக்களா? டில்லியில் இருக்கிற நீரா?;'—என்று மராட்டியர் கேட்கிறார்கள்! 'நான்தான்! நானேதான்!" என்று பதில் சொல்கிறார் நேரு'

"நேருவே! 1945-ம் வருடத்திய நேருவே! நீ உயிர் பெற்று வரமாட்டாயா?—என்று நாங்கள் கோருகிறோம்.

"மக்கள் உரிமையை மதிக்காமல், மதோன்மத்தரைப் போல், பழைய காலத்துக் காட்டுமிராண்டி, இராசாக்களைப் போல் ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருக்கிற இந்த 1956-ம் ஆண்டு நேருவுக்குப் புத்தி புகட்ட, நீ உயிர்பெற்று வாராயா?—என்று நான் கேட்கிறோம்!

"தேவிகுளம், பீர்மேடு பகுதிகளில் தமிழர்கள் வாழுகிறார்கள்; அவை தமிழகத்தோடு சேர்க்கப்பட வேண்டும், என்று நாம் கோருகிறோம்.

"தமிழர்கள் வாழுவதனாலேயே அப்பகுதிகள், தமிழகத்துடன் சேராது; அங்கிருக்கிற தமிழர்கள் விரும்புவதனாலேயே அது தமிழகத்துடன் சேராது; நான் விரும்பினால் மட்டுமே அது எங்காவது சேரலாம் அல்லது செத்து ஒழியாலாம், என்று ஒருவர் பேசுகிறார்.

"1945-ம் வருடத்திய நேருவே! நீ இறங்கி வந்து, அவருக்குப் பாடம் புகட்டாயா?—என்று நமக்குக் கேட்கத் தோன்றுகிறது!"

இதே பாணியில் தம்பி சம்பத்தே! தோழர் சம்பத் அவர்களைத் திருத்தமாட்டாயா, என்று கேட்கத் தோன்று-