96
"ஷேக் அப்துல்லா ஏற்றுக்கொள்ளவேண்டும் ஐயனே! என்று சந்தேகத்தோடு கேட்டார்; வேண்டுமென்ற கோரிக்கையில் சந்தேகம் தொனிக்கிறதே, சிஷ்யா! இந்த உரிமை வேண்டும் என்று நாம் தான் ஏற்கனவே தீர்மானித்துவிட்டோம்! இன்னும் உனக்கு ஏன் சந்தேகம்' என்று பண்டிதர் நினைத்துக் கொண்டிருக்கிறார் அப்படி!
"முதல் முதல் சந்தேகப்பட்ட அப்துல்லா; மிக மிகப் புத்திசாலி! ஆனால் பண்டிதரது பதிலைக் கேட்டதும், சந்தேகத்தை நீக்கிக்கொண்ட ஷேக்அப்துல்லா, உலகத்திலே இருக்கிற 'விடுதலை விரும்பி'களின் நிரந்தர அனுதாபத்திற்குரிய ஷேக் அப்துல்லாவாக மாறிவிட்டார்! அதனால்தான் அவர், காலவரையின்றிக், கம்பிகளை எண்ணிக்கொண்டிருக்கிறார் ஸ்ரீநகரத்துச் சிறைச்சாலையில்!
"பெரிய இந்தியாவில், ஏதாவது ஒரு குறிப்பிட்ட 'யூனிட்'—பிரதேசம் இருந்துதான் தீரவேண்டும் என்று வற்புறுத்தமாட்டோம்' என்று பேசிய 1945-வது வருடத்திய நேருவே! இதோ பார்—உன்னுடைய 'துரோகி' 1936-வது வருடத்திய நேரு, உன்னை மறுக்கிறார்!
"முடியாது முடியாது! யார் இந்தியாவிலிருந்து பிரிந்து செல்லவேண்டும் என்று கருதுகிறவர்கள்? பிளவு சக்திகளே! விடமாட்டேன்! தெருவிலே குதித்து, உங்கள் குரல்வளையைக் கடித்துக் குருதியை உறுஞ்சுவேன்! முடியாது!" என்று பேசுகிறார், 1956-வது வருடத்திய நேரு!
"பிரிந்துவிட்ட—சுயநிர்ணய உரிமைபெற்ற ஒரு மாகாணத்திலே இருக்கிற ஒரு கோஷ்டி பிரிந்து போக வேண்டுமென்று சொன்னாலும், பிரிந்துதான் போகவேண்டும் என்று கர்ஜித்த நேருவே! இதோ! பம்பாயை மராட்டியர்கள் வேண்டுமென்று கேட்கிறார்கள்! 'மராட்டியர்களே பெரும் பகுதியினராக வாழும் பெரு நகராம் பம்பாய் மராட்-